• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா? டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனை!

சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா? டிஆர்பி ரேட்டிங்கில் புதிய சாதனை!

சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா?

சின்னத்திரையின் நம்பர் 1 சீரியல் எது தெரியுமா?

இந்த சீரியலின் கதை, அன்பு, குடும்பம் மற்றும் காதல் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடிக்க பல சீரியல்களுக்கு இடையே கடும் போட்டி நடக்கும். அதிலும், குறிப்பாக ஒரே சேனலில் ஒளிபரப்பாகி, வெற்றிகரமாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு சீரியல்களுக்கும் போட்டி நிலவும். இந்நிலையில், தற்போது எல்லா சாதனைகளையும் முறியடித்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான கோகுலத்தில் சீதை.

இதற்கு முன் ஜீ தமிழ் தொடர்கள் எடுத்த டிஆர்பி ரேட்டிங்கை விட கோகுலத்தில் சீதை அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று ஜீ தமிழில் நம்பர்-1 மெகா தொடராக தேர்வாகியுள்ளது. தற்போது வரை, ஜீ தமிழ் சீரியல்களில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, செம்பருத்தி மற்றும் சத்யா ஆகிய தோடர்கள் தான் முன்னணியில் இருந்து வந்தன. அதற்கு முன்னர், யாரடி நீ மோகினி தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. ஆனால், கோகுலத்தில் சீதை நெடுந்தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற முன்னணித் தொடர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை படைத்து முதலிடத்தை பெற்றுள்ளது.

டான்ஸ் மாஸ்டர் நந்தா இந்த சீரியலில் அர்ஜுன் என்ற பாத்திரத்தில் நாயகனாகவும், நடிகை ஆஷா கவுடா வசுந்தரா என்ற பாத்திரத்தில் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் தவிர்த்து, சீரியலில் பெரிய நட்சத்திர பட்டாளமும் உள்ளது. சீரியலின் நாயகன் நந்தாவுக்கும், நாயகி ஆஷாவுக்கும் இது முதல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... Bigg Boss Tamil: இந்த வார நாமினேஷனில் வரவுள்ள மாற்றம் - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிக் பாஸ்!

இந்த சீரியலின் கதை, அன்பு, குடும்பம் மற்றும் காதல் பின்னணியில் எடுக்கப்பட்டு வருகிறது. கதைப்படி நாயகி அன்பு பாசம் நிறைந்தவராகவும், திருமணம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவும், பாரம்பரியத்தை காப்பாற்றும் பெண்ணாகவும் நடிக்கிறார். அதுமட்டுமின்றி வசுந்தரா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண். நாயகன் அர்ஜுன் பணக்கார வீட்டு பையன். மேலும், எதிலுமே பெரிய ஈடுபாடோ நம்பிக்கையோ இல்லாமல் விளையாட்டுத்தனமாக தான் விரும்பியதை எல்லாம் அடைய வேண்டும் என்ற குணம் கொண்டவன்.



இந்த இரண்டு துருவங்களும் திருமணத்தில் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. மூத்த நடிகை நளினி காந்திமதி என்ற பாத்திரத்தில், நாயகியின் பேராசை கொண்ட பாட்டியாக நடிக்கிறார். காயத்ரி, தாட்சாயினி, வசந்த் கோபிநாத், விஷ்ணுகாந்தி, ஜீவா ரவி, விஜய் கிருஷ்ணராஜ் வீணா வெங்கடேஷ் உட்பட பலரும் இந்த சீரியலில் நடித்து வருகிறார்கள்.

நவம்பர் 4, 2019 அன்று கோகுலத்தில் சீதை தொடர் ஒளிபரப்பாக தொடங்கியது. 14 மார்ச் 2021 வரை தினமும் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், 15 மார்ச் 2021 முதல் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: