அன்று முதல் இன்று வரை, "சீரியல்கள் என்று வந்து விட்டால் நாங்க தான்பா டாப்பு!" என்று கெத்து காட்டும் சன் டிவி, ஸ்டார் விஜய் டிவி சேனல்களுக்கு இணையாக ஜீ தமிழ் சேனல் வளர்ந்து வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது. ஜீ தமிழ் சேனல் ஆனது, நல்ல கதைக்களங்களின் கீழ் சில அட்டகாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதனால் சன் டிவி, விஜய் டிவி நாடகங்களுக்கு இணையாக ஜீ தமிழ் சீரியல்களும் பேசப்பட்டு வருகிறது. அப்படியான ஜீ தமிழ் சீரியல்களில் ஒன்று தான் கோகுலத்தில் சீதை.
ஆனாலும் கூட, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் "டிஆர்பி ரேட்டிங் யுத்தத்தின்" விளைவாக ஜீ தமிழ் சில புதிய சீரியல்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனொரு பகுதியாக கோகுலத்தில் சீதை சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோகுலத்தில் சீதை முடிவுக்கு வருவது குறிப்பிட்ட சீரியல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தாலும் கூட அவர்களின் மனநிலையை சற்றே உற்சாகப்படுத்தும் ஒரு குட் நியூஸும் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் - கோகுலத்தில் சீதை சீரியலில் அர்ஜுன் வேடத்தில் நடித்த நந்த கோபால், அபி டெய்லர் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் ஜவுளி அதிபரான 'சரவணன்' என்கிற கேரக்டரில் நடிக்கிறார். குறிப்பிட்ட சீரியலின் கதாநாயகன் ஆன அசோக்கைப் போலவே சரவணனுக்கும் மிகப்பெரிய ஜவுளி வியாபாரம் உள்ளது. ஆனால் அவர் தனது தொழிலில் நஷ்டத்தையே சந்திக்கிறார், இது அவரை மனச்சோர்வுக்கும், நாள்பட்ட குடிப்பழக்கத்திற்கும் இட்டு செல்வது போல கதைக்களம் அமைக்கப்பட்ட உள்ளது.
அபி டெய்லர் சீரியல் மேக்கர்களின் கூற்றுப்படி, சீரியலில் கூடுதல் சுவாரசியத்தை சேர்க்கும் முனைப்பின் கீழ் வரவிருக்கும் எபிசோட்களில் சரவணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார். நினைவூட்டும் வண்ணம், நடிகர் நந்த கோபால் ‘புகைப்படம்’ திரைப்படம் வழியாக - நடிகை பிரியா ஆனந்துக்கு ஜோடியாக - அறிமுகமானார். பிறகு சில காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகியே இருந்தார். ஒரு இடைவெளிக்குப் பிறகு, நடிகை ஆஷா கவுடாவுடன் இணைந்து 'கோகுலத்தில் சீதை' சீரியல் வழியாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
Also Read : தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?
கோகுலத்தில் சீதை சீரியல் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் நந்தா, அபி டெய்லர் சீரியலுக்குள் நுழைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், அபி டெய்லர் சீரியல் ஆனது அபிராமி (ரேஷ்மா முரளிதரன்) என்கிற ஒரு இளம் மற்றும் திறமையான தையல் தொழில் செய்யும் பெண் மற்றும் வணிக அதிபரான அசோக் (மதன் பாண்டியன்) ஆகியோரைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த கதையில் நிகழும் ஒரு திருப்பத்தைத் தொடர்ந்து அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். பிறகு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என்று கதை நீள்கிறது.
Also Read : இரண்டாவது கணவர் மற்றும் மகனுடன் நடிகை ஊர்வசி - வைரல் போட்டோ.!
அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா முரளிதரன் (அபிராமியாக), மதன் பாண்டியன் (அசோக்காக), நகைச்சுவை நடிகர் படவா கோபி (சுந்தரமூர்த்தியாக), ஜெயஸ்ரீ (ஆனந்தியாக) உடபட பல நடிகை, நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.