ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் 'கோகுலத்தில் சீதை’ தொடர் வரும் மே 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அர்ஜூன் - வசு ரொமான்ஸ் காட்சிகளை மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரையில் அனைத்து டிவி சேனல்களிலும் சீரியல்கள் தவறாமல் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இதில் இளைஞர்களை கவரும் வகையில் காதல், ரொமேன்ஸ், சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது போலவே திரைக்கதை பயணிக்கிறது. அதுமட்டுமில்லை வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில்
ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியல் நடிகை ஆஷா கவுடா, சின்னத்திரை ரசிகர்களின் கனவுக்கன்னி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் ஆஷா.
ஒரே வாரத்தில் 2வது முறை.. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!
கடந்த 2019 முதல் ஜீ தமிழ் சேனலில் கோகுலத்தில் சீதை தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் அர்ஜூன் - வசு ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.இந்நிலையில் இந்த சீரியல் மே 14ம் தேதியுடன் முடிவடைய உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கெனவே ஜீ தமிழ் சேனலில் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த 'என்றென்றும் புன்னகை' கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. வசுவாக நடிக்கும் ஆஷா கவுடாவுக்கு மட்டுமில்லை அர்ஜூனாக நடிக்கும் நந்தாவுக்கும் ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இப்படியொரு கிடா விருந்து பார்த்திருக்கீங்களா? குக் வித் கோமாளி மணிமேகலை வெளியிட்ட வீடியோ!
இந்நிலையில்
சீரியல் முடிய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே படு ஜாலியாக, சுறுசுறுப்பான திரைக்கதையுன் சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் இடையில் சீரியலின் கதை மாறி வேற ட்ராக்கில் பயணிக்க தொடங்கியது, சீரியலின் நேரம் மாற்றப்பட்டது . இது ரசிகர்களின் பொறுமையை சோதித்ததாக கூறப்படுகிறது. இதனால் சீரியல் டி.ஆர்.பியில் சின்ன சரிவை சந்தித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், தற்போது கோகுலத்தில் சீதை சீரியலுக்கு சேனல் நிர்வாகம் எண்டு கார்டு போட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.