• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5-ல் ஜெமினி கணேசன்-சாவித்ரியின் பேரன்!

பிக் பாஸ் 5-ல் ஜெமினி கணேசன்-சாவித்ரியின் பேரன்!

அபினய்

அபினய்

களத்தூர் கண்ணம்மாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபினய் அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்றார் கமல்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7-வது போட்டியாளராக ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபினய் களமிறங்கியிருக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

    இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது போட்டியாளராக அபினய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராமனுஜராக நடித்திருந்தார். தற்போது விவசாயம் செய்ய முடியாத ஏழைகளின் நிலங்களை லீஸிற்கு எடுத்து, அதில் உரிமையாளர்களையே வைத்து தான் விவசாயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.



    களத்தூர் கண்ணம்மாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபினய் அவர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என்றார் கமல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: