Home /News /entertainment /

சன் டிவி சீரியலில் பிக் பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!

சன் டிவி சீரியலில் பிக் பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண் டார்.

    சன் டிவி சீரியலில் பிக் பாஸ்  சீசன் பிரபலம் கணேஷ் வெங்கடராமன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எந்த சீரியலில் தெரியுமா?

    சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் டிவி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி கொள்கின்றன. அந்த வகையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க சேனல் நிர்வாகம் சீரியல்களை அதிகம் கையில் எடுக்கின்றன.  திடீரென்று சீரியலில் முக்கியமான ட்விஸ்ட், 1 மணி நேர சிறப்பு எபிசோடு அல்லது வெள்ளித்திரை பிரபலங்களை சிறப்பு ரோலில் அறிமுகப்படுத்துவது. இதை தான் சமீபகாலமாக எல்லா டிவி சேனல்களும் கையாளுகின்றன. அந்த வகையில் சன் டிவியில் காலை முதல் இரவு வரை ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் இதுவரை ஏகப்பட்ட  வெள்ளித்திரை பிரபலங்களும் முகம் காட்டி உள்ளனர்.

    திட்டு வாங்கிய கமல்ஹாசனிடம் கைத்தட்டல்கள் வாங்கிய பிக் பாஸ் பிரியங்கா!

    தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ’தாலாட்டு’ சீரியலில் பிக் பாஸ் பிரபலம், நடிகர் கணேஷ் வெங்கடராமன் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுக் குறித்த புரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கணேஷ் வெங்கடராமன் தமிழில் அபியும் நானும் படம் மூலம் அறிமுகமானார். அதே  போல் கமலுடன் உன்னை போல் ஒருவன், நாயகி போன்ற பல  படங்களில்  நடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண் டார். அந்த நிகச்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து அவருக்கு ’மிஸ்டர் ஜென்டில்மேன்’  பட்டத்தை  ரசிகர்கள் கொடுத்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நிஷாவை கணேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளார். நிஷா சமீபத்தில் தான் செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் கணேஷ் வெங்கட் ராமனும் தற்போது சன் டிவி சீரியலில் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil, Sun TV, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி