ஜோடி சேரும் கேப்ரியல்லா - பாலாஜி... காதல் வந்திருச்சா? - ரசிகர்கள் கமெண்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வருகிறது.

ஜோடி சேரும் கேப்ரியல்லா - பாலாஜி... காதல் வந்திருச்சா? - ரசிகர்கள் கமெண்ட்
பிக்பாஸ் தமிழ் 4
  • Share this:
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4-வது சீசனை எட்டியுள்ளது.முதல் சீசனில் ஓவியா ஆரவ் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலுக்கு சம்மதிக்கதாதால் இருவர்களும் நெருங்கிய நண்பர்களாக உலாவந்தனர். இரண்டாவது சீசனில் யாசிகா - மஹத், ஷாரிக் - ஐஸ்வர்யா ஆகியோரும் பிக்பாஸ் வீட்டில் நெருங்கிப் பழகி காதலை பரிமாறிக் கொண்டனர்.

கடந்த சீசனில் கவின் - லாஸ்லியா, அபிராமி - முகென் ஆகியோரது காதல் பேசப்பட்டது. இந்தமுறை அப்படி காதலில் விழப்போவது யார் என்று பார்வையாளர்கள் நினைத்திருக்க, கேப்ரியல்லா - பாலாஜியின் ரொமான்டிக்கான பேச்சை இன்றைய 3-வது புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது நிகழ்ச்சிக்குழு.

அந்த வீடியோவில் சமையலறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டே பாலாஜியுடன் கொஞ்சலாக பேசுகிறார் கேப்ரியல்லா. பதிலுக்கு பாலாஜியும் நான் யாரிடமும் நடிக்க மாட்டேன். முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுவேன் என்று கூற கேப்ரியல்லா அவரை செல்லமாக அடிக்க துரத்திச் செல்கிறார். பின்னணியில் யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற காதல் பாடல் ஒலிக்கிறது.
இந்த புரமோ வீடியோவைப் பார்த்த பார்வையாளர்கள் இந்த சீசனிலும் காதல் வந்துவிட்டதா என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading