• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் 5-ல் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு!

பிக் பாஸ் 5-ல் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு!

பிக் பாஸ் போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அறிமுகப்படுத்தப்பட்டார்.

  • Share this:
    விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு போட்டியாளராகக் களமிறங்கியிருக்கிறார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.



    இதையடுத்து பிக் பாஸ் போட்டியாளராக நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் கடந்து வந்த கடினமான நாட்களை நினைவுக்கூர்ந்தார். கொரோனா சூழலால் மற்ற கலைஞர்களைப் போல தானும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: