Home /News /entertainment /

விலங்குகள் நிகழ்நேரத்தில் பேசுகின்ற முதல் இந்திய திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது..

விலங்குகள் நிகழ்நேரத்தில் பேசுகின்ற முதல் இந்திய திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிறது..

Anbulla Ghilli

Anbulla Ghilli

Colors Tamil | 'அன்புள்ள கில்லி’ படமானது ஒரு நபரின் வாழ்க்கைப் பயணத்தையும் மற்றும் அவரது செல்ல வளர்ப்பு நாயுடனான உறவையும் நகைச்சுவையாக இது சித்தரிக்கிறது

  ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியர் ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் தமிழ் சேனல் வாங்கியுள்ளது.

  இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தனித்துவமான இந்த ரொமான்டிக் திரைப்படத்தில் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, மயில்சாமி, பூ ராமு, இளவரசன் மற்றும் புதுமுக நடிகரன மைத்ரேயா ராஜேஷ்சேகர் என பலர் நடித்துள்ளனர். மேலும் 'கில்லி’ என்கிற முக்கியமான கதாப்பாத்திரத்தில் அமிகோ என்ற நாய் நடித்துள்ளது. கில்லி என்ற நாய் கதாபாத்திரத்திற்கு பிரபல காமெடி நடிகரான சூரி குரல் கொடுத்திருக்கிறார்.

  இயற்கை அழகு கொஞ்சும் கொடைக்கானல் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்து வரும் ராமு மற்றும் கில்லி ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள அழகான அன்பை படம்பிடித்துக் காட்டுகிறது. ராமு அவரது குழந்தைப்பருவ தோழியான பார்கவி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண்ணான அன்விதா ஆகியோரோடு முக்கோண காதலில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் அழகிய தருணங்களையும் தனது நண்பனான ராமு காதலில் வெற்றி காணவும், உண்மையான காதலை கண்டறியவும் தோழனான கில்லி ராமுவிற்கு எவ்வாறு உதவுகிறது என்கிற காட்சிகள் விறுவிறுப்பாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்கிறது.  ஒரு வனச்சரகராக வேடம் தரித்து ஈவு இரக்கமற்ற வகையில் வனவிலங்குகளை கொன்று குவிக்கும் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மைம் கோபி கதாபாத்திரம் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடும்போது ஒரு புயலே உருவாகிறது. சுந்தரின் கோரப்பிடிகளிலிருந்து ராமுவும், கில்லியும் எப்படி தப்பித்து வெற்றி கண்டனர் என்பதே கதையின் எஞ்சிய பகுதி ஆகும்.

  Also Read : மாளவிகா மோகனன் கவர்ச்சி படம்... படுமோசமாக போட்டாஷாப் செய்து பரப்புவதாக புகார்..

  கில்லிக்கு பின்னணி குரல் கொடுத்த அனுபவம் பற்றி நகைச்சுவை நடிகர் சூரி பேசுகையில், “பார்வையாளர்களையும், ரசிகர்களையும் சென்றடையவும், மகிழ்ச்சிப்படுத்தவும், உற்சாகமூட்டவும் இரண்டு மிகச்சிறந்த வழிமுறைகளாக திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. இத்திரைப்படத்தில் செல்லமாக வளர்க்கும் ஒரு நாயின் கதாபாத்திரத்திற்கு எனது குரலை வழங்கும் எனது தனித்துவமான முயற்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கலர்ஸ் தமிழ் வழியாக இல்லங்களில் உள்ள அனைத்து பார்வையாளர்களையும் மிகப்பெரிய அளவில் இத்திரைப்படம் சென்றடையும் என்பது கூடுதல் திருப்தியளிக்கிறது. இப்பணியில் ஈடுபட்டது ஒரு இனிய அனுபவமாக இருந்த அதே நேரத்தில் சவாலானதாகவும் இருந்தது. இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியோடு ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.  இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இத்திரைப்பட ஒளிபரப்பு குறித்து கூறியதாவது: “எனது இயக்கத்தில் வேறு படங்கள் வந்திருந்தபோதிலும், இதன் தனித்துவமான கருத்தாக்கத்தின் காரணமாக, அன்புள்ள கில்லி எனது நெஞ்சத்திற்கு மிகவும் நெருக்கமானதாக எப்போதும் இருக்கும். நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக இத்திரைப்படம், கலர்ஸ் தமிழ் போன்ற ஒரு பிரபலமான சேனலில் ஒளிபரப்பாவது இன்னும் அதிக மகிழ்ச்சியையும், பிரமிப்பையும் தருகிறது. பல்வேறு உணர்வுகளின் சங்கமமாக உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் பார்வையாளர்களின் மனதை நெகிழ வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

  Also Read : உன் கணவன் என்னைப் பற்றி பேசியது தவறு – சுஜாவுடன் வனிதா வாக்குவாதம்

  ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விலங்குகள் நிகழ்நேரத்தில் பேசுகின்ற முதல் இந்திய திரைப்படமான ‘அன்புள்ள கில்லி’ உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக வருகின்ற ஞாயிறு(Feb 6th) அன்று இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.
  Published by:Selvi M
  First published:

  Tags: Actor Soori, Colors Tamil | கலர்ஸ் தமிழ், Dog, Entertainment, Tamil Cinema

  அடுத்த செய்தி