ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வி.ஜே.சித்ரா முதலாமாண்டு நினைவு தினம்... ரசிகர்கள் உருக்கம்!

வி.ஜே.சித்ரா முதலாமாண்டு நினைவு தினம்... ரசிகர்கள் உருக்கம்!

வி.ஜே.சித்ரா

வி.ஜே.சித்ரா

சித்ராவின் மரணம் கொலையாக இருக்குமோ என்ற சந்தகேத்தின் அடிப்படையில் ஹேம்நாத்திடம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய துக்க சம்பவம் ஒன்று நடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகி விட்டது. தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருந்த விஜே சித்ரா என்ற சித்து கடந்த 2020-ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 9) தான் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். விஜே சித்ரா என்று குறிப்பிடுவதை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்று சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியுமளவிற்கு முல்லை கேரக்டராகவே வாழ்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மறைந்த விஜே சித்ரா.

  இவரது திடீர் தற்கொலை தமிழக டிவி ரசிகர்களிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் மக்கள் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி சரியாக சில வாரங்கள் பிடித்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார் விஜே மற்றும் பிரபல சீரியல் நடிகையாக இருந்த விஜே சித்ரா. எந்நேரம் பார்த்தாலும் தானும் கலகலப்புடன் இருந்தது பிறரையும் சிரிக்க வைத்த சித்ராவின் தற்கொலை உண்மையிலேயே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவரது தீவிர ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

  சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இவர்களில் இன்னும் பலர் சித்ராவின் மறைவால் கண்ணீர் சிந்தி வருகின்றனர். மக்கள் டிவி-யில் விளையாடு வாகைசூடு ஷோ மூலம் ஆங்கராக அறிமுகமாகிய சித்ரா, தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜீ டான்ஸ் லீக் உள்ளிட்ட டான்ஸ் ஷோக்களில் பங்கேற்று டான்ஸராக தனது மற்றொரு பரிமாணத்தை காட்டினார். இதனை தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் கதவை தட்ட சிறுசிறு வேடங்களில் சீரியல்களில் தோன்றினார்.

  சன் டிவி-யில் 2014 - 2018 வரை ஓடிய சின்னப்பாப்பா பெரியபாப்பா நகைச்சுவை சீரியலில், பெரியபாப்பாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் சீசன் 3-ல் சிறப்பு தோற்றத்தில் நடித்து விஜய் டிவி ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த முகமாக மாறினார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Chitra kamaraj (@chithuvj)  2018-ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கேரக்டரை ஏற்று நடித்து தான் இவரது தொழில் வாழ்வில் ஏற்பட்ட பெரிய ட்விஸ்ட். இந்த சீரியலில் முல்லையாகவே வாழ்ந்தார் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி வந்தார். இவருக்கும் தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு முற்றி சண்டை பெரிதான நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் விஜே சித்ரா.
   
  View this post on Instagram

   

  A post shared by Chitra kamaraj (@chithuvj)


   
  View this post on Instagram

   

  A post shared by SK rasigai 💖 (@vjchithu___fan)  கொலையாக இருக்குமோ என்ற சந்தகேத்தின் அடிப்படையில் ஹேம்நாத்திடம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், சித்ரா தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீரியல் முடியும் வரை முல்லையாகவே வாழ்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்களை சோஷியல் மீடியாவில் சோகத்துடன் ஷேர் செய்து வருகின்றனர் சித்ராவின் தீவிர ரசிகர்கள்... "நீ எங்களை விட்டு பிரிந்தாலும், மறைந்தாலும் நாங்கள் நினைத்தவுடன் கண்களில் இருப்பாய் கண்ணீராக.." என்ற கண்ணீர் அஞ்சலி போஸ்ட் வைரலாகி வருகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial