Home /News /entertainment /

சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்கா

சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு சிறந்த பெண் தொகுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த ஆங்கருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் டிவியில் சில தினங்களுக்கு முன்பு டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் விஜய் டிவி ஃபிக்‌ஷன், நான் ஃபிக்‌ஷன் பிரிவில் பல்வேறு விருதுகள் வழங்கி , கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டன. சீரியல் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், என பலரும் விருதுகளை பெற்றனர். இந்த நிகழ்ச்சி வருடந்தோறும் விஜய் டிவியில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வருடத்திற்கான  விருது நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு சிறந்த பெண் ஆங்கருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்ட சீரியல் பிரபலங்கள்… வைரலாகும் போட்டோஸ்!

    அதற்கு காரணம் பிக் பாஸ் சீசன் 5ல்  டைட்டில் வின்னராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டார். விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்கள் பெற்றதும் பிரியங்கா தான், நிறைய நெகடிவ் விமர்சனங்களை பெற்றதும் பிரியங்கா தான். பிக் பாஸில் இவர் அடித்த லூட்டிகள் அதிக பேரால் ரசிக்கப்பட்டாலும் நரியங்கா, சகுனி, என பிரியங்காவை வறுத்தெடுத்த ரசிகர்களும் உண்டு. இதை எல்லாம் கடந்து தான் பிக் பாஸ் 5ல் இரண்டாம் இடத்தை பிடித்து மக்களுக்கு பிடித்த மன கவர்ந்த போட்டியாளர் என்ற பெயரையும் பிரியங்கா பெற்று விட்டார்.

    பீஸ்ட் ட்ரைலரில் இடம்பெறும் இந்த வில்லன் யார் தெரியுமா?

    கிட்டத்தட்ட 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார், வெளியே வந்ததும் சில வார ஓய்வுக்கு பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்ய தொடங்கினார். திடீரென்று நடுவில் பிக் பாஸ் நண்பர்களுடன் ஹதராபாத் சென்றார். இப்படி வருடம் முழுவதும் பல்வேறு காரணங்களால் பிஸியாக இருந்த பிரியங்கா, எப்படி சிறந்த ஆங்கரிங்கான விருதை பெறுவார்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



    அப்படி எந்த நிகழ்ச்சியை இந்த வருடத்தில் பிரியங்கா வெற்றிக்கரமாக முடித்து கொடுத்தார்? எனவும் நெகட்டிவ் கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்த வருடத்துடன் 13 ஆண்டுகள் ஆங்கரிங் பயணத்தை பிரியங்கா நிறைவு செய்கிறார். அதை கவுரவிக்கும் விதமாக கூட இந்த விருது வழங்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் இணையத்தில் வெடித்துள்ளன. நிகழ்ச்சி ஒளிப்பரப்பான பின்பு தான் உண்மையில் பிரியங்காவுக்கு எந்த காரணத்தினால் விருது வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிய வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Anchor Priyanka, Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி