பிக்பாஸை விட சூப்பரான வேலை எனக்கு இருக்கு - பங்கேற்கவில்லை என மறுப்பு தெரிவித்த பிரபலம்..
தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவலை பிரபல ஸ்டைலிஷ்ட் மறுத்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 4
- News18 Tamil
- Last Updated: September 16, 2020, 4:39 PM IST
விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின.
ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர். அதேபோல் பிரபல ஃபேஷன் கொரியோகிராஃபர் கருன் ராமன் பங்கேற்க இருப்பதாக நேற்று தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கருன் ராமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருப்பதாவது, “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதை விட ஒரு நல்ல வேலை எனக்கு இருக்கிறது. எனவே வீண் வதந்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” என்று கருன் ராமன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கருன் ராமன் தற்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 
சமீபத்தில்‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் ஆகியோரது பெயர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளன. அதேவேளையில் இவர்கள் யாரும் இத்தகவலுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.