முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

தாய்மை ஒரு பக்கம்.. தொழில் பக்தி ஒரு பக்கம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு குவியும் பாராட்டுக்கள்!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குழந்தைக்கு பால் கொடுத்தபடியே மேக்கப் போட்டு கொண்டு ஷூட்டிங்கிற்கு நடிகை ஃபரினா தயாராகும் ஒரு ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது

  • 1-MIN READ
  • Last Updated :

ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சின்னத்திரை ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்றுள்ள சூப்பர் ஹிட் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிகர் அருண் பிரசாத் பாரதி கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கண்ணம்மா கேரக்டரில் நடித்து கலக்கி கொண்டிருந்த நடிகை ரோஷினி ஹரிபிரியன், வெள்ளித்திரை வாய்ப்பு காரணமாக திடீரென சீரியலை விட்டு விலகி விட்டார். இப்போது இவருக்கு பதில் வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா வேடத்தில் நடித்து வருகிறார். பாரதி மற்றும் கண்ணம்மா கேரக்டர்களுக்கு இணையாக இந்த சீரியலில் மிக முக்கியமான கேரக்டர் ஒன்று உண்டு என்றால் அது டாக்டர் வெண்பா ரோல் தான்.

இந்த ரோலில் நன்கு செட்டாகி மிரட்டலான நடிப்பால் வில்லத்தனம் செய்து வருபவர் நடிகை ஃபரினா ஆசாத். இந்த சீரியல் ரசிகர்களை பெரிது கவர முக்கிய காரணமே ஹீரோயின்  மற்றும் வில்லி ஃபரினாவின் காம்பினேஷன் தான். இதற்கு ஒருபடி பின்னால் தான் பாரதி மற்றும் கண்ணம்மா இடையிலான சீன்கள். கண்ணம்மா - வெண்பா இருவருக்கும் இடையில் அடிக்கடி நடக்கும் மோதல்கள், கண்ணம்மாவை பாரதியின் வாழ்வில் இருந்து துரத்த வெண்பா செய்யும் சூழ்ச்சிகள் உள்ளிட்ட பல வில்லத்தனம் இந்த சீரியலை மேலும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் கொண்டு செல்கிறது.

ஒரு காலத்துல எப்படி இருந்த கதை.. இப்ப நிஷாவை நம்பி பாரதி கண்ணம்மா சீரியல்!

சரியாக கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலை விட்டு விலகிய நேரத்தில் தான் நிஜ வாழ்வில் கர்ப்பமாக இருந்த வெண்பா அதாவது நடிகை ஃபரினா ஆசாத் பிரசவத்திற்காக பிரேக் எடுத்து கொண்டு சென்றார். ரோஷினி மற்றும் ஃபரினா இல்லாமல் சில நாட்கள் பாரதி கண்ணம்மா சீரியலை பார்க்காமல் விட்ட ரசிகர்கள் பலர். பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை ஷூட்டிங்கில் பங்கேற்ற ஃபரினா சோஷியல் மீடியாவில் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் பாராட்டை பெற்றார்.




 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)



ஆண் குழந்தையை பெற்றெடுத்து சில வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு திரும்பி இருகிறார் நடிகை ஃபரினா. இவர் பிரசவத்திற்கு சென்ற போது அவ்வளவு தான் இனி வெண்பாவாக ஃபரினா நடிக்க மாட்டார். ரோஷினுக்கு பதில் வேறு நடிகை வந்துள்ளதை போல இவருக்கு பதிலும் வேறு நடிகை வில்லி வேடத்தில் நடிக்க வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் சில வார ஓய்வுக்கு பிறகு கம்பேக் கொடுத்து அது அத்தனையும் வதந்தி என்றாக்கி விட்டார் ஃபரினா. பலர் பிரசவத்திற்கு பிறகு மாத கணக்கில் ஓய்வு எடுக்கும் நிலையில் சில வார ஓய்வுக்கு பிறகு சீரியலுக்கு திரும்பிய ஃபரினாவின் நம்பிக்கை ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

also read.. பாக்கியலட்சுமி கோபியை திட்டு ரசிகர்கள்

இதனிடையே பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குழந்தைக்கு பால் கொடுத்தபடியே மேக்கப் போட்டு கொண்டு ஷூட்டிங்கிற்கு நடிகை ஃபரினா தயாராகும் ஒரு ஃபோட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. "பணிபுரியும் பெண்கள் தாய்மையையும் சமாளிக்க முடியும், நீங்கள் அறிந்திராத பலத்தை அது பெற வைக்கிறது" என்ற கேப்ஷனுடன் இந்த ஃபோட்டோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனை பார்த்த பல ரசிகர்கள் நடிப்பு தொழிலில் மிகுந்த ஈடுபாடு காட்டும் ஃபரினாவை பாராட்டி மற்றும் வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bharathi Kannama, TV Serial, Vijay tv