• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நான் செய்த மிகப்பெரிய தவறு.. வெண்பா இவ்வளவு ஓபனாக பேசுவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல!

நான் செய்த மிகப்பெரிய தவறு.. வெண்பா இவ்வளவு ஓபனாக பேசுவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கல!

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

ஃபரீனாவின் இந்த துணிச்சலான பதில் ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.

  • Share this:
    பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ரசிகரின் கேள்விக்கு துணிச்சலாக அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா எனும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். டி.ஆர்.பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருப்பவர் ’வெண்பா’ தான்.இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.இப்படி வில்லத்தனங்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் வில்லி வெண்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் ஃபரீனா மிகவும் துணிச்சலானவர்.

    ஆங்கராக தனது பயணத்தை தொடங்கியவர் இன்று சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கர்ப்பிணியான இவருக்கு சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து இவர் எடுத்த கர்ப்பகால ஃபோட்டோ ஷூட்டுகளும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்து தனக்கு பிடித்ததை தைரியமாக செய்து வருகிறார்  ஃபரீனா. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பரீனா ஏராளமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். இதனிடையே சமீபத்தில் ஃபரீனா தனது ரசிகர்களுடன் நேரலையில் பேசினார்.




    அப்போது ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் பரீனா பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த தவறான முடிவு எது? என்று கேட்டதற்கு யாரும் எதிர்பார்க்காத ஓப்பனான பதிலை ஃபரீனா பதிவு செய்தார். அவர் சொன்ன பதில்
    :நாச்சியார்புரம் சீரியல்”. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலில் ஃபரீனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஆனால் கொரோனா காலத்தில் அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஃபரீனாவின் இந்த துணிச்சலான பதில் ரசிகர்களை கவனிக்க வைத்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: