• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு வித்தியாச பட்டத்துடன் ரசிகர்கள் மரியாதை!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு வித்தியாச பட்டத்துடன் ரசிகர்கள் மரியாதை!

வி.ஜே.சித்ரா

வி.ஜே.சித்ரா

ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் சித்ராவிற்கு, அவருடைய தீவிரமான ரசிகர்கள் அழகிய புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

  • Share this:
    முல்லை என்று கூறினாலே மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு வயது வித்தியாசமின்றி, எல்லா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.


    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் வெற்றிக்கு இவரின் முல்லை கதாபாத்திரத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தனக்கென்று ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை சித்ரா, திடீரென்று காணாமல் போன நட்சத்திரத்தைப் போல, இறந்து விட்டார். சித்ரா இறந்து பல மாதங்கள் ஆனாலும் அவர் இறந்துவிட்டார் என்பதை இன்னும் பலராலும் நம்ப முடியவில்லை. ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் சித்ராவிற்கு, அவருடைய தீவிரமான ரசிகர்கள் அழகிய புகைப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.


    சின்னத்திரையில் முதன் முதலில் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சித்ரா, படிப்படியாக முன்னேறி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் நடிகை சித்ரா.




    அதற்குப் பிறகு ஜீ தமிழ், ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட பல்வேறு சேனல்களிலும் பணியாற்றியுள்ளார். சரவணன் மீனாட்சி, சீசன் 2 சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலும இவர் நடித்திருந்தார். ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடம் பிடித்திருந்த சித்ரா நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகிய வேலுநாச்சி சீரியலில் சித்ரா தனக்கென்ற ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா தொடரில், முல்லையாக நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். சின்னத்திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே சித்ரா இருந்தார் என்றும் கூறலாம். ஆனால் திடீரென்று இவர் தற்கொலை செய்துகொண்டது, அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.




    இயற்பெயரான சித்ரா என்பதையே மறந்து செல்லுமிடமெல்லாம் முல்லை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இறந்த பிறகு முல்லை பாத்திரத்திற்கு வேறு யாராலுமே சித்ராவை போல உயிர் கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டது. ரசிகர்களிடத்தில், முல்லை சித்ராவின் மீது இருக்கும் அன்பு இப்போது வரை குறையவில்லை.


    அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக சின்னத்திரை சித்ராவின் ரசிகர்கள் இவருக்கு மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து, அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


    ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு.





    தவிர, தற்போது முல்லையாக நடித்தவரும் காவ்யா அறிவுமணிக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேற போவதாகவும் செய்தி வந்துள்ளது. இது உண்மையாக இருப்பின் முல்லையாக அடுத்து யார் நடிக்கப் போகிறார்கள் என்ற  கேள்வி எழுந்துளது.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: