Home /News /entertainment /

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட மகான் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட மகான் அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

மஹான் அப்டேட்

மஹான் அப்டேட்

கார்த்திக் சுப்பராஜின் இந்த அறிவிப்பு படம் ஓடிடிக்கு பதில் திரையரங்கில் வெளியாவதை உறுதி செய்வதாக உள்ளது என விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் மகான் படம் குறித்து வெளியிட்ட அப்டேட்டால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம் நடிப்பில் 2016-ல் வெளியான இருமுகன் படம் சுமாராகப் போனது. அதன் பிறகு அவர் நடித்த சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான் படங்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. தற்போது கார்த்திக் சுப்பராஜின் மகான், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா ஆகிய படங்களை விக்ரம் முடித்துள்ளார். கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் பல வருடங்களாக தயாரிப்பில் உள்ளது.

இந்தப் படங்களில் முதலில் மகான் வெளிவருகிறது. கார்த்திக் சுப்பராஜின் முந்தையப் படம் ஜகமே தந்திரம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. படமும் சுமாராகவே இருந்தது. மகான் படமும் அந்தப் படத்தைப் போல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என கூறி வருகின்றனர். இது விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு மகான் படத்தின் கறுப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ், மகான் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மிக விரைவில் படம் வெளியாகும். உங்கள் பார்வைக்கு படத்தை கொண்டுவர ஆவலாக இருக்கிறேன். வெளியீட்டு அப்டேட் மற்றும் புரமோஷன் நிகழ்வுகள் விரைவில், எனக் கூறியிருந்தார்.

பாஜக ஊடகங்களை மிரட்டலாம், ஆனால்... தனியார் சேனல் சர்ச்சை குறித்து ஜோதிமணி எம்.பி



மோடியை விமர்சித்த தனியார் தொலைக்காட்சி பொது மன்னிப்பு கோர வேண்டும் - பாஜக வலியுறுத்தல்

கார்த்திக் சுப்பராஜின் இந்த அறிவிப்பு படம் ஓடிடிக்கு பதில் திரையரங்கில் வெளியாவதை உறுதி செய்வதாக உள்ளது என விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், மகான் திரையரங்கு வெளியீடா இல்லை நேரடி ஓடிடி வெளியீடா என்பதை தயாரிப்பு தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை. மகானில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். அதனால், படம் திரையரங்கில் வெளியாவதையே விக்ரமும் விரும்புகிறார் என்கின்றன தகவல்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Vikram, Dhruv Vikram

அடுத்த செய்தி