ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை… முன்னாள் காதலனின் டார்ச்சர் காரணமா?

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை… முன்னாள் காதலனின் டார்ச்சர் காரணமா?

வைஷாலி தக்கர்

வைஷாலி தக்கர்

கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு வைஷாலி உயிரிழந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல சின்னத்திரை நடிகை ‘வைஷாலி தக்கர்’ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்னாள் காதலனின் டார்ச்சர் காரணமாக, வைஷாலி இந்த முடிவை எடுத்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்தி டிவி சீரியல் நிகழ்ச்சிகளில், பிரபல நடிகையாக இருப்பவர் வைஷாலி தக்கர். 29 வயதாகும் இவர், இந்தி வட்டாரத்தில் நன்றாக அறியப்படும் சின்னத்திரை நடிகையாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் வைஷாலி ஆக்டிவாக இருப்பதால் அவரை ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

  இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வீட்டில் வைஷாலி தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார்.

  தீபாவளி ரிலீஸ்! தொடங்கியது புக்கிங்! சர்தார்,பிரின்ஸ் படங்களுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

  இன்று முழுவதும் அவரது அறை திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்தவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

  அப்போது சீலிங் ஃபேனில் தூக்கிட்டு வைஷாலி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கடிதமொன்றை எழுதி வைத்து விட்டு வைஷாலி உயிரிழந்ததாகவும், அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  இதனடிப்படையில் அவரது முன்னாள் காதலனின் இடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னாள் காதலனின் டார்ச்சரே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

  ஹன்சிகாவுக்கு திருமணம்?! தயாராகும் ஜெய்பூர் அரண்மனை! தீயாய் பரவும் தகவல்கள்!

  கடந்த ஆண்டு கென்யாவை சேர்ந்த மருத்துவர் அபிநந்தன் சிங்குக்கும், வைஷாலிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது கொரோனா தீவிரமாக இருந்ததால் இருவரும் திருமணத்தை தள்ளிவைத்தனர். ஆனால் அதன் பின்னர் திருமணம் குறித்த எந்த அப்டேட்டையும் வைஷாலி வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: TV Serial