பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்!

விபத்தில் சிக்கிய காரில் நடிகை ஷோபா உடன் மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர்.

பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்!
விபத்தில் சிக்கிய கார்
  • News18
  • Last Updated: July 20, 2019, 7:39 PM IST
  • Share this:
டயர் பஞ்சரானதால் கட்டுபாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதிய விபத்தில் பிரபல கன்னட சின்னத்திரை நடிகை ஷோபா சம்பவ இடத்திலேயே பலியானார்.

கன்னட சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஷோபா. நடிகை ஷோபா 'மகளு ஜானகி' என்ற சின்னத்திரை மூலம் மிகவும் பிரபலமடைந்தவர்.

பெங்களூரில் வசித்து வந்த நடிகை ஷோபா கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசிதிப்பெற்ற பனசங்கிரி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். சித்ரகோட் என்ற இடத்தில் கார் டயர் தீடிரென பஞ்சரானதால் கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி உள்ளது.


நடிகை ஷோபா
சின்னத்திரை நடிகை ஷோபா


இந்த பயங்கர விபத்தில் காரிலிருந்த நடிகை ஷோபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணம் செய்த அவரது உறவினர்கள் சுகன்யா, மஞ்சுளா ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். காரில் நடிகை ஷோபா உடன் மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மற்றவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நடிகை ஷோபா சாலை விபத்தில் பலியான சம்பவம் கன்னட சின்னத்திரை நடிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Also Watch

First published: July 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading