Home /News /entertainment /

விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஹீரோவாக நடித்திருப்பது யார் தெரியுமா?

விஜய் டிவி ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஹீரோவாக நடித்திருப்பது யார் தெரியுமா?

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘சிப்பிக்குள் முத்து’ என்ற புது சீரியல் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்க உள்ளார் ஜெய் டிசோசா .

கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெய் டிசோசா என்பவர், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

மாடலாக இருந்து சின்னத்திரையில் பிரபல ஹீரோவாக மாறியவர் ஜெய் டிசோசா. மாடலிங்கில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த ஜெய் டிசோசா, 2021ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஆகாஷா தீபா’ என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஸ்டார் சுவர்ணா சேனலில் ஒளிபரப்பான அந்த தொடரில் பார்வைகுறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 2016ம் ஆண்டு முதலே வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கிய ஜெய் டிசோசா ‘ராக’ மற்றும் ‘ஹேப்பி நியூ இயர்’ போன்ற கன்னட மொழிப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஜெமினி தொலைக்காட்சியில் 2019 முதல் 2020ம் ஆண்டு வரை ஒளிபரப்பான ‘கல்யாணி’ சீரியலில் அரவிந்த் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் பவித்ர பந்தம் என்ற தெலுங்கு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இப்படி தெலுங்கு, கன்னட டி.வி. சேனல்களில் சீரியல் நடிகராக வலம் வந்த ஜெய் டிசோசா விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘சிப்பிக்குள் முத்து’ என்ற புது சீரியல் மூலம் தமிழில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாக்கியலட்சுமி’ , ‘தமிழும் சரஸ்வதியும்’ ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் ‘வேலைக்காரன் என்ற புதிய சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனிடையே கடந்த சில வாரங்களாகவே ‘சிப்பிக்குள் முத்து’ என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளதாக விஜய் தொலைக்காட்சி புரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

also read : நிஜத்தில் நான் இப்படித்தான் - மனம் திறந்த சுந்தரி



இது வழக்கமான அக்கா, தங்கை கதை கிடையாது. தான் மகளாக நினைத்து வளர்ந்த தங்கை காதலித்தவனை திருமணம் செய்துகொள்வதற்காக அக்கா ஒரு மனவளர்ச்சி குன்றிய இளைஞனை திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையை தியாகம் செய்வது தான் கதை. சினிமா பெயரில் அமைந்த சிப்பிக்குள் முத்து சீரியல், ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘செல்லேலி காபுரம்’ என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆகும். இந்த சீரியல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

also read : பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்ட நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சாந்தினி!

இந்த சீரியல் மூலமாக தான் ஜெய் டிசோசா தமிழில் நடிக்க அறிமுகமாகிறார். இதுகுறித்து ஜெய் டிசோசா கூறுகையில், "நான் 2016 முதல் தொலைக்காட்சியில் நடித்து வருகிறேன். தமிழ் சீரியலில் எனது பாத்திரம் சவாலானது, ஏனென்றால் நான் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மனிதராக நடிக்கிறேன், பெற்றோரின் நிராகரிப்பை எதிர்கொள்கிறேன். இறுதியில், அந்த மன வளர்ச்சி குன்றியவருக்கு திருமணம் கூட செய்துகொள்கிறார்கள்.



also read : கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பாக உள்ள 2 பிரபலமான சன் டிவி சீரியல்கள்.. இது எப்போ?

ஆனால் அவரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு வேறு சில நோக்கங்கள் உள்ளன. இது ஒரு செயல்திறன் சார்ந்த பாத்திரம், இதில் பல ஆண் கதாநாயகர்கள் நடிக்க முடியாது, குறிப்பாக தொலைக்காட்சியில். அதுதான் என்னை தொடருக்கு இழுத்தது. நான் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில் நடிப்பேன், அது எனது கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானது” என தெரிவித்துள்ளார்.

மேலும் கன்னட சீரியலுக்கு தனது சொந்த குரலில் லைவ் டப்பிங் முறை மூலம் ஜெய் டிசாசோ டப்பிங் பேசி வருகிறார். சிப்பிக்குள் முத்து சீரியலில் தனக்கான கதாபாத்திரம் மிகவும் சவாலானது என்பதால், தானே தமிழில் டப்பிங் பேச முடிவெடுத்துள்ளாராம். அதற்கான முயற்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி