• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தவறு ஆடையில் இல்லை கண்களில்தான் உள்ளது - வைரலாகும் டிடி-யின் இன்ஸ்டா பதிவு!

தவறு ஆடையில் இல்லை கண்களில்தான் உள்ளது - வைரலாகும் டிடி-யின் இன்ஸ்டா பதிவு!

டிடி

டிடி

1990-ல் சுபயாத்ரா எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விசில், நள தமயந்தி, உள்ளிட்ட படங்களிலும் தனது ஆரம்ப கால நாட்களில் நடித்தார்.

  • Share this:
விஜய் டிவி-யில் அன்று முதல் இன்று வரை மாறாத ஒரே விஷயம் என்றால் அது தொகுப்பாளினி டிடி தான். முதன்முதலில் ஆங்கரிங் மூலம் மக்களின் மனதை ஈர்த்த ஒருவர் தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இன்றளவும் பலருக்கு ஆங்கர் ஆக வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைத்தவர் தான் டிடி. அந்தளவுக்கு பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். அவரது நகைச்சுவை கலந்த பேச்சு, ஸ்டைல், தொகுத்து வழங்கும் பாணி போன்றவற்றால் எண்ணற்ற ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தொலைக்காட்சித் துறையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் பிரபலமான இவர், பள்ளியில் படிக்கும் போதே ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தவர், இதனை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதோடு விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடி, அடிக்கடி ரீலிஸ், புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள டிடி அங்கு கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் கேப்சனில், அந்தமானில் நான் கடற்கரைக்கு ஏற்ற மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தேன். ஒரு ஆண் கூட என்னை பாதுகாப்பு இல்லாமலோ, தவறாகவோ உணர வைக்கவில்லை. தவறு நிச்சயம் ஆடையில் இல்லை அதைப் பார்க்கும் கண்களில்தான் உள்ளது. அது உடையில் அல்ல, மனநிலை தான் காரணம். எனவே உலக சுற்றுலா தினமான இன்று நான் ஒவ்வொரு பெண், திருநங்கை பயணம் செய்யும்போது பாதுகாப்பாக உணர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த டிடி, கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பயணம் மற்றும் சுற்றுலா நிர்வாகத்தில் எம்.பில் படித்தார். மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதால், குடும்ப சூழ்நிலை காரணமாக வெகு விரைவில் வேலைக்குச் செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானார்.

Also read... பிரகாஷ்ராஜால் தடைபட்ட கார்த்தியின் விருமன்...?

1990-ல் சுபயாத்ரா எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விசில், நள தமயந்தி, உள்ளிட்ட படங்களிலும் தனது ஆரம்ப கால நாட்களில் நடித்தார். அதோடு, சன் டிவி-யில் ஒளிபரப்பான சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து விஜய் டிவி-யில் என்ட்ரி கொடுத்த இவர், பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: