விஜே சித்ரா மரணம் குறித்து வெளியிடப்படும் மோசமான தகவல்கள் - ரசிகர்கள் எச்சரிக்கை

நடிகை சித்ரா

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜே. சித்ராவின் திடீர் மறைவால் ரசிகர்கள் சோகமடைந்தனர்.

  • Share this:
சித்ரா என்று சொல்வதை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை என்று சொன்னால் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியுமளவிற்கு முல்லை கேரக்டராகவே வாழ்ந்தவர் மறைந்த விஜே சித்ரா. டிவி-யில் ஆங்கராக தொழில் வாழ்க்கையை துவக்கிய சித்ரா, பின் டான்ஸராகி அதன் பின்னர் சின்னத்திரையில் சில சீரியல்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடிக்க துவங்கினார். கடந்த ஆண்டு டிசம்பர் 9 அன்று சென்னை பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் விஜே சித்ரா.

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த விஜே. சித்ராவின் திடீர் மறைவால் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சித்ரா மரணம் தொடர்பான புகாரில் அவர் பதிவுத்திருமணம் செய்து கொண்டிருந்த ஹேம்நாத்திடமும் விசாரணை நடைபெற்றது. இறுதியில் விஜே. சித்ராவின் மரணம் தற்கொலையால் நிகழ்ந்தது என்று அறிவிக்கப்பட்டது.

சின்னத்திரை வாழ்க்கை பயணத்தில் பல வருடங்களாக இருந்த போதும் ஏராளமான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து ஒருவழியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கேரக்டரில் வாழ்ந்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சித்ராவின் மரணத்தை இவ்வளவு சீக்கிரம் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் மறைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அவர் மரணம் பற்றிய பல வதந்திகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றன சில சோஷியல் மீடியாக்கள்.

Also Read : மெகா சங்கமத்தில் இணையாத பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள்... என்னாச்சு..?

சித்ராவின் ஆவியுடன் பேசியதாகவும் அவர் மரணத்திற்கு காரணம் இது தான் என்று சில தவறான தகவல்களை பரப்புவதும், தகவல்களை திரித்து கூறுவதும், அவரது மரணத்திற்கு காரணம் என ஆபாச தகவல்களை சொல்வதும் என மனதில் நினைப்பதை எல்லாம் கன்டென்ட்டாக்கி காசு பார்த்து வருகின்றனர் சில யூ டியூபர்கள்.

இதனால் எரிச்சலடைந்துள்ள விஜே சித்ராவின் சில தீவிர ரசிகர்கள் சித்ராவின் மரணம் பற்றி ஆபாசமான மற்றும் தவறான தகவல்களை சோஷியல் மீடியாக்களில் பரப்பும் வேலையே இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். சித்ராவின் இறப்பு குறித்த மோசமான வீடியோ ஒன்றை பார்க்க நேரிட்ட ரசிகர் ஒருவர் தனது கோபம் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளார். nangalum_chithuvj_fan_thaan என்ற அந்த இன்ஸ்டா யூஸர் தனது ஆதங்கத்தை எச்சரிக்கும் போஸ்ட்டாக வெளியிட்டுள்ளார்.
அந்த போஸ்ட்டில் இருப்பது பின்வருமாறு:

"அனைத்து போலி யூடியூபர்கள், கட்டண விளம்பரதாரர்கள் மற்றும் போலி ஐடி-க்கள் கவனத்திற்கு:- நீங்கள் புகழ் பெறவோஅல்லது காசு சம்பாதிக்கவோ மறைந்த வி.ஜே. சித்ராவின் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் உண்மையிலேயே எச்சரிக்கிறேன். அவர் ஒரு கமர்ஷியல் ப்ராடக்ட் அல்ல. அவரது மர்மமான மரணம், வழக்கு மற்றும் கோஸ்ட்பாக்ஸ் நேர்காணல் பற்றி போலி செய்திகளை வெளியிடும் உங்களை எல்லாம் அவருடைய ஆன்மா சும்மா விடாது. போலி செய்திகளை சொல்வது பற்றி நீங்கள் வெட்கப்படுவதேயில்லை. இதை உங்கள் சொந்த சகோதரி, மனைவி அல்லது தாயிடம் செய்வீர்களா.? ஜாக்கிரதை, இல்லையென்றால் நாங்கள் சட்டப்பூர்வமாக உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று அந்த யூஸர் எச்சரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: