முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி: புதிய சீசனில் இவங்களாம் குக்கா ? வேற லெவல்ல இருக்கப்போது !

குக் வித் கோமாளி: புதிய சீசனில் இவங்களாம் குக்கா ? வேற லெவல்ல இருக்கப்போது !

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட், தொகுப்பாளர் ரக்ஷன், செஃப் தாமு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட், தொகுப்பாளர் ரக்ஷன், செஃப் தாமு

ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிந்த வாரத்தில் விஜய் டிவியின் எண்டர்டெயின்மென்ட ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 வருகிற 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. முதல் 3 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்த சீசனிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சீசன்களில் கோமாளியாக களமிறங்கிய சிவாங்கி, இந்த சீசனில் குக்காக கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருந்தார். இதில் ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர்.

இந்த நிலையில் புதிய குக்குகளாக வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், நடிகை விசித்திரா, நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர், நடிகை சிருஷ்டி டாங்கே, ஜிகர்தண்டா புகழ் காளையன், நடிகை ஷெரின், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் விஷால் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்துவருகின்றன. அந்த வகையில் குக் வித் கோமாளியில் நடித்த அஸ்வின் என்ன சொல்லப் போகிறாய், செம்பி படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பவித்ரா நாய் சேகர் படத்திலும் தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்திலும் ஹீரோயினாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Vijay tv