மதுமிதாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் பிக்பாஸ் பிரபலம்!

news18
Updated: September 10, 2019, 4:46 PM IST
மதுமிதாவுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் பிக்பாஸ் பிரபலம்!
மதுமிதா, டேனி
news18
Updated: September 10, 2019, 4:46 PM IST
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா தனது கைக்கட்டை அகற்றி எடுக்கப்பட்ட புகைப்படத்தை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனியல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களான சந்தானம், சூரி உள்ளிட்டோருடன் நடித்துள்ள மதுமிதா, தனது காமெடி காட்சிகளால் புகழ் அடைந்ததை விட, தற்போது பிக் பாஸ் சர்ச்சையில் சிக்கி அதிக ஊடக வெளிச்சத்திற்கு ஆளாகிவருகிறார். பிக்பாஸ் வீட்டை விட்டு மதுமிதா வெளியாற்றப்பட்டாலும், அவர் அளித்துவரும் பேட்டிகள் பிக்பாஸ் சர்ச்சையைக் கொழுந்துவிட்டு எரிய வைக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஹலோ ஆப் டாஸ்க்கில் வருணபகவானும் கர்நாடகாக்காரர் போல அதுவும் தமிழ்நாட்டுக்கு மழை தரவில்லை என்ற கருத்தை மதுமிதா பதிவிட்ட நிலையில், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஷெரின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை பிக்பாஸ் வீட்டுக்குள் பூதாகரமாக வெடிக்கவே எப்போது பார்த்தாலும் நீ என்ன தமிழ்ப் பெண் என்று பேசுகிறாய். தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா என்று சகபோட்டியாளர்கள் கேட்டுள்ளனர்.


அப்போது தனது கையை மதுமிதா அறுத்துக் கொண்டதால் பிக்பாஸ் விதியை மீறிவிட்டதாகக் கூறி வெளியேற்றப்பட்டார்.

பின்னர் விஜய் டிவி நிர்வாகம் ஒப்பந்தப்படி தனது சம்பளத்தைக் கொடுக்கவில்லை என்று நிகழ்ச்சிக் குழுவுக்கு மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி நிர்வாகம் மதுமிதா மீது புகார் அளித்தது. இதையடுத்து சம்பள பாக்கியை மதுமிதாவிடம் ஒப்படைத்த விஜய் டிவி, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்தது.

நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு நடந்தது என்ன என்பதை விலாவாரியாக விளக்கினார் மதுமிதா. பிக் பாஸ் வீட்டில் தன்னை சக போட்டியாளர்கள் கேங் ராகிங் செய்ததாகவும், கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதற்கு பிக் பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளர்கள்தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் நடிகர் கமல்ஹாசனையும் மதுமிதா விட்டு வைக்கவில்லை. வீட்டிற்குள் நடப்பதை முழுமையாக தெரிந்துகொள்ளாமல், கமல் செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டையும் தனது பேட்டியில் முன் வைத்துள்ளார்.இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான டேனியல் மதுமிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுமிதாவின் கைக்கட்டை அகற்றி எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘இதுதான் மதுமிதாவுக்காக என்னை பேச வைத்தது’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் ஏன் இப்படி செய்து கொண்டீர்கள் என்று கேள்வியும், விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

மதுமிதாவின் முழு பேட்டியைக் காண கிளிக் செய்க 

வீடியோ பார்க்க: பப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...