சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரையிலும் பலரது நினைவை விட்டு நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது கோலங்கள் சீரியல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. கோலங்கள் சீரியலை இயக்கியது மட்டுமில்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் திருச்செல்வம் நடித்திருந்தார். அபி என்கிற கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர்.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியலை இயக்கி வருகிறார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நடிகை ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார். பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் மருமகள்கள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நால்வரும் அப்பத்தாவின் உதவியோடு சுயமரியாதையுடன் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்படுகின்றனர். பின் தங்களது கணவர்மார்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் அவர்கள் கிண்டலாக பேசும் வசனம் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்று வருகிறது. பின்னர் இந்தப் பட்டியலில் ஜனனியின் கணவன் சக்தியும் இணைந்துக் கொண்டான். தன் தவறை உணர்ந்து, தனது மனைவிக்கும் அண்ணிக்களுக்கும் ஆதரவாக மாறினான்.
தொடரில் ஆதி குணசேகரன் என்ற எதிர்மறை வேடத்தில் நடித்துவரும் மாரிமுத்து தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். மேலும் அவரின் வசனங்கள் வைத்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலில் குணசேகரனின் தங்கைக்கு வரன் பார்த்திருப்பார்கள். அந்த மாப்பிள்ளையில் தாயாராக நடித்துள்ளார் அயலி தொடரில் நடித்த காயத்ரி. எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக வரும் அவர் தொடர்ந்து வெற்றிலை போடும் நபராக உள்ளார். முதல் நாள் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற காயத்ரி வெற்றிலை போட்டுள்ளார். பழக்கம் இல்லாமல் வெற்றிலை போட்டதால் வாய் ஒரு மாதிரியாக இருந்திருக்கிறது. இதையடுத்து ஷூட்டிங் முடிந்ததுமே நேராக டாக்டரிடம் சென்றிருக்கிறார். சுண்ணாம்பு போட்ட உடனேயே வாய் புண்ணாகிவிடும். அதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஷூட் இருந்தாலே நேராக மருத்துவமனைக்கு சென்றுவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial