Home /News /entertainment /

பாலிடிக்ஸ் ஐடியா இருக்கா? உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சீரியல் நடிகை!

பாலிடிக்ஸ் ஐடியா இருக்கா? உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சீரியல் நடிகை!

ஹரிப்ரியா - உதயநிதி

ஹரிப்ரியா - உதயநிதி

ஹரிப்ரியா உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சன் டிவி சீரியல் நடிகை ஹரிப்ரியா உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    10 வருடத்திற்கு முன்பு காணும் காலங்கள் சீரியல் மூலம் தனது நடிப்பை தொடங்கினார் ஹரிப்ரியா. அந்த சீரியலின் வெற்றிக்கு பிறகு ஜீ தமிழில், ’மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’ என்னும் சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் நடித்த விக்னேஷ் குமாரை காதலித்து கரம் பிடித்தார். சில ஆண்டுகளுக்கு பின்பு இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். பெர்சனல் லைஃபில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஹரிப்ரியா சின்னத்திரையில் கவனம் செலுத்துவதை நிறுத்தவில்லை.

    கெமிஸ்ட்ரி அள்ளுதே.. தனுஷ் - பார்வதியாக மாறிய சீரியல் ஜோடி!

    ப்ரியமானவள்’, ‘லட்சுமி வந்தாச்சு’ ‘கண்மணி’ சீரியலுக்கு பிறகு இப்போது திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் ஹரிப்ரியாவுக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது. அவர் இழுத்து இழுத்து பேசும் அழகு, டைமிங் காமெடி, கதிர், குணசேகரன் என மொத்த குடும்பத்தையும் திட்டி தீர்ப்பது என சீரியலில் நந்தினியாகவே வாழ்கிறார். இந்த முறை சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் ஹரிப்ரியாவுக்கு விருது நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

    சீரியலை தவிர சோஷியல் மீடியாவிலும் ஹரிப்ரியா ஆக்டிவாக இருக்கிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம், ரீலீஸ் வீடியோக்களை வெளியிடுவார். லைவில் ரசிகர்களுடன் உரையாடுவார். இப்படி இருக்கையில் சமீபத்தில் ஹரிப்ரியா உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Haripriya Isai (@haripriyaa_official)






    மிகவும் எளிமையான மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்து ஃபோட்டோவை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வருங்காலத்தில் அரசியல் பிரவேசம் ஐடியா இருக்கா? என கேட்டனர். ஆனால் ஹரிப்ரியா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என பதில் அளித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி