Home /News /entertainment /

எதிர் நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்..கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்!

எதிர் நீச்சல் சீரியலில் அடுத்து நடக்க போவது இதுதான்..கெஸ் செய்ய முடியாத ட்விஸ்ட்!

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல் சீரியல் கதையின் அடுத்த கட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    எதிர் நீச்சல் சீரியலில் வரும் வார எபிசோடில் ரசிகர்களுக்கு முக்கியமான ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

    எதிர்நீச்சல்  சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதையில் படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. தந்தையின் கனவே தனது கனவாக நினைத்து வாழ்ந்த ஜனனி, கடைசியில் ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்டது ஜனனிக்கு தெரிந்து விட்டது. மற்ற 3 மருமகள்களை போலவே ஜனனியும் வீட்டில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால் ஜனனி எல்லாவற்றையும் எதிர்த்து கேள்வி கேட்கிறார். இதனால் குணா, ஜனனியை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்து விடுகிறது.

    உச்சக்கட்ட பரபரப்பில் மெளன ராகம்.. காதம்பரியை கைது செய்யும் போலீஸ்!

    அதே போல் ஜனனியின் அப்பா நாச்சியப்பனுக்கும்  எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எம்பிஏ படித்த தனது மகள் இப்போது வீட்டில் வீட்டு வேலை செய்கிறார் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ள  முடியவில்லை கதைப்படி இப்போது தர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் குணா. ஆனால் ஜனனி அவரை ஸ்கூலுக்கு எக்ஸாம் எழுத அனுப்பி வைத்து விட்டார். இதனால் குணா கோபத்தில் கொந்தளிக்கிறார். வழக்கம் போல் சக்தியை ஜனனிக்கு எதிராக தூண்டி விடுகிறார். ஈஸ்வரியை வீட்டை விட்டு அனுப்பி வைத்து விட்டார்.

    ஸ்பெயினில் கெத்து பண்ண நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. தேசிய கொடியை பறக்க விட்ட மொமண்ட்!

     



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அடுத்து சக்தி ஜனனிக்கு என்ன தண்டனை கொடுப்பார்? என தெரியவில்லை இப்படி இருக்கையில் கதையின் அடுத்த கட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நாச்சியப்பன் கெளதமை சந்தித்து பேசுகிறார். தனது மகளின் நலனுக்காக கெளதம் - ஜனனி நட்பை பிரித்தார் நாச்சியப்பன். ஆனால் இன்று கெளதம் குணாவின் எதிரி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். இது ஜனனிக்கு தெரியாது. இப்படி இருக்கையில் நாச்சியப்பன் , கெளதமை சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் கூடிய விரைவில் ஜனனி - கெளதம் சந்திக்க போகிறார்கள் என்று தான் அர்த்தம். அந்த தருணத்திற்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி