Home /News /entertainment /

ஈஸ்வரிக்கும் ஜனனிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி.. எதிர் நீச்சல் சீரியலில் ட்விஸ்ட்!

ஈஸ்வரிக்கும் ஜனனிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி.. எதிர் நீச்சல் சீரியலில் ட்விஸ்ட்!

 எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

எதிர் நீச்சல் சீரியலில் வீட்டுக்கு வந்த பிறகு ஜனனியையும் ஈஸ்வரியையும் குணா என்ன செய்வார்?

    எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கிறது. ஈஸ்வரி அப்பா சொன்ன வார்த்தையால் இப்போது ஈஸ்வரின் வாழ்க்கை கேள்விகுறியாக நிற்கிறது. இதுக் குறித்த பரபரப்பான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    குணசேகரன் குடும்பத்திற்கு வந்திருக்கும் விடுதலை காற்று தான் ஜனனி என்பதை மொத்த குடும்பமும் அறியும் நேரம் வந்து விட்டது. இத்தனை நாட்களாக ஜனனிக்கு எந்த உண்மையும் தெரியாது. ஆனால் தற்போது மொத்த குடும்பமும் அவரை ஏமாற்றி கல்யாணம் செய்த விஷயம் தெரிய வந்து விட்டது. தனது அப்பாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என நினைக்கிறார். ஆனால் வீட்டில் கொத்தடிமைகள் போல் ஈஸ்வரி அக்கா, நந்தினி நடத்தப்படுவதை ஜனனியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இப்போது ஜனிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சக்தி மட்டும் தான்.

    அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

    அதே போல், ஜனனியை குணசேகரன் குடும்பம் ஏமாற்றிய உண்மையை தெரிந்து கொண்ட அவரின் மாமன் மகள் வீட்டுக்கே வந்து சண்டை போடுகிறார். அவரையும் குணாவின் தம்பிகளை அடித்து துரத்துகின்றனர். இது தப்பு என்று சக்தி, ஜனிக்காக துணை நிற்கிறார். இந்த நேரத்தில் தான் ஈஸ்வரியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று அவரின் அப்பா குணாவின் வீட்டுக்கு வருகிறார். தன்னுடைய மனைவியை அனுப்ப மாட்டேன் என்று குணா விடாபிடியாக நிற்க, ஈஸ்வரி அப்பா அங்கிருந்து கிளம்புகிறார். ஈஸ்வரி அக்கா, அழுவதை பார்த்து தாங்க முடியாத ஜனனி, மொத்த வீட்டையும் எதிர்த்து அவரை ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கிறார்.



    ஆனால் ஈஸ்வரி செல்வதற்குள் அவரின் அம்ம இறந்து விடுகிறார். இப்போது ஈஸ்வரியும் ஜனனியும் துக்கம் நடந்த வீட்டில் தான் இருக்கின்றனர். குணாவுக்கு தகவல் செல்கிறது. பதிலுக்கு குணா மாலை அனுப்பி வைக்கிறார். அந்த மாலையை கிழித்து குணாவை திட்டி விடுகிறார் ஈஸ்வரி அப்பா. எல்லா விஷயமும் கேள்விபட்டு குணசேகரன் செம்ம கோபத்தில் ஈஸ்வரி மற்றும் ஜனனிக்காக காத்திருக்கிறார்.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    அடுத்து என்ன நடக்கும்? வீட்டுக்கு வந்த பிறகு ஜனனியையும் ஈஸ்வரியையும் குணா என்ன செய்வார்? என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி