சமீபத்தில் சன் டிவியில் திருமணத்தில் மணப்பெண் நடனம் ஆடுவது குறித்து முழு நீள வசனம் பேசி சர்ச்சையில் சிக்கிய சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது. கோலங்கள் புகழ் திருச்செல்வம் தான் இந்த சீரியலின் இயக்குனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு திருச்செல்வம் மீண்டும் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார்.நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். அப்பாவிற்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம் மற்றும் பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்திருக்கும் எதிர் நீச்சல் சீரியலின் டயலாக் ரைட்டர் யார் தெரியுமா? அவரும் பிரபல சீரியல் நடிகை தான். தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. , சின்னத்திரை ரசிகர்கள் ‘கோலங்கள்’ ஆர்த்தியை சீக்கிரத்தில் மறந்து இருக்க மாட்டார்கள். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”, “என்னவளே” போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்புத்துறைக்குள் வந்த ஆர்த்தியின் நிஜப்பெயர் ஸ்ரீவித்யா. ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரிட் “ஜில்லுன்னு ஓரு காதல்” படத்தில் சப்போர்ட்டிங் ரோலிலும் நடித்துள்ளார்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!
பின்னர் சீரியலுக்கு வந்த ஸ்ரீவித்யாவுக்கு கோலங்கள் சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரமும், தென்றல் சீரியலில் சாருலதா வீரராகவன் என்ற கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். திருமணத்துக்கு பிறகு சில காலம் நடிப்பிற்கு பிரேக் விட்டார். குடும்பம், குழந்தை என்றிருந்த அவர், சிறு இடைவெளிக்கு பிறகு ”சித்திரம் பேசுதடி”, ”கைராசி குடும்பம்” ஆகிய நாடகங்களின் மூலம் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி ஆனார். பின்னர் சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவில் மீண்டும் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். தற்போது எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.ஆனால் அதற்கு பதிலாக எதிர் நீச்சல் சீரியலில் டயலாக் ரைட்டராக உள்ளார்.
பிரபல சீரியலில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா வெண்பா?
கண்டிப்பாக அவரை ஊக்கப்படுத்தி இந்த விஷயத்தை செய்ய வைத்தவர், இயக்குனர் திருச்செல்வமாக தான் இருப்பார். காரணம், அவர் பெண்களை மையப்படுத்தி சீரியல்கள் எடுக்கும் இயக்குனர் மட்டுமில்லை, சீரியல் நடிகைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவர்களின் அனைத்து திறமைகளை ஊக்கப்படுத்தும் ஆசிரியரும் கூட. திருச்செல்வம் பற்றி இதுவரை பேட்டி கொடுத்திருக்கும் அனைத்து சீரியல், நடிகர் நடிகைகளும் இதை தான் பதிவு செய்து இருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.