எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தனை நாட்களாக ஜனனிக்கு எந்த உண்மையும் தெரியாது. ஆனால் தற்போது சக்தி, நந்தினி என மொத்த குடும்பமும் அவரை ஏமாற்றி கல்யாணம் செய்த விஷயம் தெரிய வந்து விட்டது. இதனால் அழுது தீர்த்தவர் திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். அடுத்து என்ன நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கோலங்கள் திருச்செல்வம் சன் டிவியில் இயக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். அப்பாவிற்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம் மற்றும் பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதையில் படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்ட ஜனனி, எதிர்நீச்சல் போட தயாராகி விட்டார். இத்தனை நாட்களாக ஆபீஸ், எம்.பி ஆக்குகிறோம் என ஜனனியை மொத்த குடும்பமும் ஏமாற்றி வந்தனர்.இதற்கு சக்தியும் உடந்தை. ஆனால் இனிமேல் சக்தி தான் ஜனனியை எம்.பி ஆக்க போகிறார். குணசேகரன், எல்லா உண்மையும் ஜனனியிடம் சொன்ன பின்பு நம்பிக்கை துரோகத்தால் தலைகுனிந்து போன ஜனனி அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்தார். சக்தியிடம் புலம்பி வெடித்தார் பதிலுக்கு சக்தியும் கோபத்தை காட்ட யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து கிளம்பி விட்டார்.
ஈஸ்வரி அக்காவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நந்தினியும் ஒருபக்கம் ஜனனியை தேடி அலைகிறார். சக்தி தேடி தேடி அலைந்து கடைசியில் உடைந்து போய் அழுகிறார். அப்போது தான் அவரின் அண்ணியிடம் இனிமேல் ஜனனியை கைவிட போவதில்லை அவரின் ஆசையை நிறைவேற்றி காட்ட போவதகவும், எம்.பி ஆக்குவேன் என்றும் உடைந்து அழுதுக் கொண்டே சொல்கிறார். அடுத்த 2 நாட்களில் ஜனனி வீட்டுக்கு வரும் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. குணாவின் காலில் ஜனனியின் அப்பாவும் விழ போகிறார் என்ற வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.