சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ரேணுகா ரோலில் நடித்த ஆங்கர் பிரியதர்ஷினி அந்த சீரியலில் இருந்து விலகியதாக ஏகப்பட்ட வதந்திகள் பரவிய நிலையில் தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புரமோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
வெறும் 100 எபிசோடுகளை மட்டுமே கடந்துள்ள எதிர் நீச்சல் சீரியல் சன் டிவியின் வெற்றி சீரியல் லிஸ்டில் இணைந்துள்ளது. திருச்செல்வம் இயக்கியுள்ள இந்த சீரியலுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் ஒரு எபிசோடை கூட மிஸ் செய்யாமல் பார்க்கின்றனர். குணசேகர் வீட்டு 4 மருமகள்கள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி இவர்களை சுற்றி ஒட்டுமொத்த கதையும் செல்கிறது. அவ்வளவு படித்தும் வீட்டில் அடிமை போல் இருந்த 3 பேருக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஒளியாக வந்திருக்கிறார் கடைசி மருமகள் ஜனனி. இவர் தான் இந்த வீட்டின் ஒட்டுமொத்த நிலையையும் மாற்ற போகிறார். அவருக்கு துணையாக சக்தி இருக்க போகிறார்.
பேருக்கு தான் வில்லி.. பாரதி கண்ணம்மாவில் மீண்டும் ஏமாறும் வெண்பா!
இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் மிகப் பெரிய அளவில் ஃபேன்ஸ் கூட்டம் உருவாகி உள்ளது. நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா ரோல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதே போல் ரேணுகாவாக நடிக்கும் ஆங்கர் பிரியதர்ஷினி இயல்பான நடிப்பு, தென் மாவட்ட தமிழ் பாஷை என அச்சு அசல் ரேணுகாவாகவே சீரியலில் வாழ்கிறார். கடந்த வார எபிசோடில் பிரியதர்ஷினியை காட்டவில்லை அதவாது ஜனனி கோயம்புத்தூர் கிளம்பி சென்றது, வீட்டு வாசலில் உட்கார வைக்கப்பட்டது என எந்த சீனிலும் ரேணுகா அண்ணியை காட்டவில்லை.
அண்ணனுக்கு முடியாத போது, இது இப்ப தேவையா? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு வந்த சோதனை!
அதற்குள் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாக வதந்திகள் இணையத்தில் பரவ தொடங்கின. ஏகப்பட்ட வதந்திகளும் விடியோக்களும் யூடியூப்பில் உலா வர தொடங்கின. கடைசியில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய எபிசோடில் ரேணுகா இடம் பெற்று இருக்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெ:ளியாகியுள்ளது.
View this post on Instagram
அதாவது குணா கட்டி இருக்கும் புதுவீட்டில் இன்று பூஜை. இதற்காக 3 மருமகள்களும் தயாராக இருக்கின்றனர். ஈஸ்வரி, நந்தினியுடன் ரேணுகாவும் இருக்கிறார். ஜனனி சக்தியுடன் கோயம்புத்தூரில் இருந்து காரில் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லை இந்த விழாவுக்கு ஜனனியின் அம்மாவும் வருகிறார். இப்படி ஏகப்பட்ட ட்விஸ்டுகள் இன்றைய எபிசோடில் காத்துக் கொண்டிருக்கின்றனர். கூடவே ரேணுகா ரோலில் நடிக்கும் பிரியதர்ஷினி விலகல் குறித்த வதந்திக்கும் விடை தெரிந்து விட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sun TV, Television, TV Serial