Home /News /entertainment /

பிரிய போகிறார்களா சக்தி - ஜனனி? எதிர் நீச்சலில் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்!

பிரிய போகிறார்களா சக்தி - ஜனனி? எதிர் நீச்சலில் இயக்குனர் வைக்கும் ட்விஸ்ட்!

எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

எதிர் நீச்சல் எபிசோடில் ஜனனி ஆஸ்பிட்டலில் இருப்பதை தெரிந்து கொண்டு அவரின் அம்மாவும் அப்பாவும் ஓடி வருகின்றனர்.

    எதிர் நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவில் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் ஜனனி தனது அம்மா மற்றும் அப்பாவிடம் சொல்லி விடுகிறார்.

    சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதை படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. தந்தையின் கனவே தனது கனவாக நினைத்து வாழ்ந்த ஜனனி, கடைசியில் ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்டார். ஆனாலும் சக்திக்காக எல்லாவற்றையும் தாங்கி கொண்டார். வீட்டில் இதைப்பற்றி மறைத்து விட்டார். ஒருநாள் கண்டிப்பாக இது மாறும் என நினைத்தார். ஆனால் கடைசியில் ஜனனியை சக்தி வீட்டை விட்டு அனுப்பி விட்டார். மனமுடைந்த ஜனனிக்கு விபத்து ஏற்பட இப்போது அவர் ஆஸ்பிட்டலில் இருக்கிறார்.

    ஆண்டி, குண்டு என கலாய்த்தவர்களுக்கு சீரியல் நடிகை கொடுத்த நச் பதில்!

    மற்ற 3 மருமகள்களை போலவே ஜனனியும் வீட்டில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதே குணாவின் விருப்பம். ஆனால் ஒவ்வொரு முறையும்  குணாவை ஜனனி தோற்கடித்து விடுகிறார். ஈஸ்வரி அக்கா  சொத்தை எதிரி குடும்பதிற்கு விற்க ஜனனி உதவியதால் சக்தி அவரை வீட்டை விட்டு அனுப்பினார். கடைசியில் ஜனனியை கார் ஒன்று இடிக்க அவரை காப்பாற்றி கெளதம் ஆஸ்பிட்டலில் சேர்கிறார். இந்த விஷயம் தெரிந்ததும் சக்தி குணாவின் பேச்சை மீறி ஆஸ்பிட்டல் வந்து விட்டார்.



    இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜனனி ஆஸ்பிட்டலில் இருப்பதை தெரிந்து கொண்டு அவரின் அம்மாவும் அப்பாவும் ஓடி வருகின்றனர். ஜனனியிடம் என்ன நடந்தது? என கேட்கின்றனர். வீட்டில் நடந்த பிரச்சனை மற்றும் சக்தி பேசியதை ஜனனி சொல்லிவிடுகிறார். இனிமேல் நீங்க ஜனனியுடன் வாழ வேண்டாம் என சக்தியிடம் ஜனனியின் அம்மா சொல்லிவிடுகிறார். மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர். இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் தினம் தினம் ட்விஸ்டுடன் தான் சீரியலை முடிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி