எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணா குடும்பத்தின் சுயரூபம் என்னவென்று ஜனனிக்கு தெரிந்து விட்டது. இதிலிருந்து மீள ஜனனி, எதிர்நீச்சம் போட தயாராகி விட்டார். அவருடன் சக்தி துணை நிற்பாரா? என்ற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எதிர்நீச்சம் சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதையில் படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. தந்தையின் கனவே தனது கனவாக நினைத்து வாழ்ந்த ஜனனி, கடைசியில் ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்டது ஜனனிக்கு தெரிந்து விட்டது. மற்ற 3 மருமகள்களை போலவே ஜனனியும் வீட்டில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இத்தனை நாட்களாக ஆபீஸ், எம்.பி ஆக்குகிறோம் என ஜனனியை மொத்த குடும்பமும் ஏமாற்றி வந்தனர்.
ரசிகர்களை ஆட்கொண்ட குரல்… குரலழகி ஸ்வர்ணலதா பிறந்த நாள் ஸ்பெஷல்!
இப்போது எல்லா வேலையும் முடிந்து விட்டது, ஆதி குரூப் 18 வது கம்பெனியும் தொடங்கப்பட்டு விட்டது. ஆபீஸின் எம்.பி என்னவோ ஜனனி தான், ஆனால் ஜனனி எல்லா வேலையும் செய்ய மாட்டார், அவரின் பெயரில் வேறொருவர் அங்கே இருப்பார். இது வழக்கமாக மற்ற 3 மருமகள்களுக்கும் நடந்தது தான். ஈஸ்வரி, நந்தினி என மற்றவர்களின் நிலைமை தான் ஜனனிக்கும். குணசேகரன், எல்லா உண்மையும் ஜனனியிடம் சொன்ன பின்பு நம்பிக்கை துரோகத்தால் தலைகுனிந்து போன ஜனனி அழுதுக் கொண்டே வீட்டுக்கு வந்தார்.
அங்கே, ஈஸ்வரி, நந்தினியிடம் கோபத்தில் வெடித்து அழுதார். ஈஸ்வரி அக்காவால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சக்தி ஆசைப்பட்ட ஒரே காரணத்தினால் தான் அவர் பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார். இப்படி இருக்கையில், ஜனனியின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணம் என தெரிந்துக் கொண்டவர் சதியிடம் இதை பற்றி பேசினார். எந்த நேரத்திலும் ஜனனி பக்கம் தான் நிற்க வேண்டும் எனவும் அட்வைஸ் செய்தார்.
அந்த சீரியல் நடிகருடன் விஜய் சேதுபதி இவ்வளவு நெருக்கமா! வைரல் ஃபோட்டோ
ஜனனியை சக்தி சமாதானம் செய்ய நினைத்தார். ஆனால் சக்தியின் பேச்சை ஜனனி கேட்பதாக இல்லை. தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அழுதது எல்லாமே போதும் என்று எதிர் நீச்சல் போடவும் துணிந்து விட்டார். இப்போது இருவருக்கு சக் தி துணை நிற்பாரா? என்பது தான் அடுத்த ட்விஸ்ட்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.