சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் வெற்றிக்கரமாக 100வது எபிசோடை நிறைவு செய்துள்ளது. வெற்றியுடன் கூறிய இந்த மகிழ்ச்சியான தருணத்தை சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
சன்டிவியில் இரவு 9.30 ஸ்லாட் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பிரைம் டைம்மான இந்த நேரத்தில் வழக்கமாக முக்கியமான சீரியல்கள் மட்டுமே ஒளிப்பரப்பாகும். அந்த வகையில் எப்போதுமே சன் டிவியில் இந்த நேரத்தில் ராதிகா சீரியல் மட்டுமே இடம் பெற்று இருக்கும்.அண்ணாமலை, வாணி ராணி, சித்தி 2 என ராதிகா சீரியல்கள் எப்போதுமே இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாவது வழக்கம் . இந்நிலையில் தற்போது கோலங்கள் புகழ் இயக்குனர் திருச்செல்வத்தின் ‘எதிர் நீச்சல்’ சீரியல் இந்த டைமிங்கில் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது ஆரம்பம் முதலே அதிரடி திருப்பங்கள், கதைக்களத்துடன் ஒளிப்பரப்பாகி வரும் ‘எதிர் நீச்சல்’ சீரியல் மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளது.
6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?
இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை ஒன்றிலும் சிக்கி இருந்தது. திருமணத்தில் மணப்பெண் நடனம் ஆடுவது குறித்து முழு நீள வசனம் பேசியது சமூகவலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பி இருந்தது. ஆனால் அந்த தடைகளை எல்லாம் தாண்டி இப்போது சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி, கனிகா, மாரிமுத்து உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர். அப்பாவிற்கும் மகளுக்கும் இடையிலான பாசப் போராட்டம் மற்றும் பெண்களை அடிமையாக நடத்தும் மனநிலைக்கு எதிராக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இப்போது கதைப்படி ஜனனிக்கு குணசேகரன் குடும்பத்தை பற்றி எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டது. இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க நினைத்தவருக்கு சக்தி ஆறுதலாக இருந்தார். எங்க தம்பி, ஜனனி பக்கம் சாய்ந்து விட்டாரோ என பயந்த குணா, ஒரு கேம் விளையாடினார். கடைசியில் மீண்டும் சக்தி இப்போது அண்ணன் பக்கமே சென்று விட்டார். ஈஸ்வரி இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அவர் வீட்டுக்கு வரும்போது இன்னொரு சம்பவமும் அரங்கேற போகிறது. இப்படி சீரியலின் திரைக்கதையில் இயக்குனர் பல கைத்தட்டல்களை வாங்கி கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் 100வது எபிசோடை நிறைவு செய்தது. 100 எபிசோடுக்குள் மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ள எதிர் நீச்சல் சீரியல் குழு இந்த தருணத்தை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் சீரியல் நடிகர் நடிகைகள், இயக்குனர், டயலாக் ரைட்டர் ஸ்ரீவித்யா, ஆகியோர் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சீரியலில் கம்பேக் கொடுத்துள்ள திருச்செல்வத்துக்கு இந்த சீரியல் நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.