Home /News /entertainment /

ஜனனியை காணோம்... எதிர் நீச்சல் சீரியலில் பரபரப்பு!

ஜனனியை காணோம்... எதிர் நீச்சல் சீரியலில் பரபரப்பு!

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது.

    எதிர் நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. புரமோவில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்று  காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்த ஜனனியை காணவில்லை. குணசேகரன் கோபத்தில் குதிக்கிறார்.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மிகப் பெரிய வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் புரமோவிற்காக ரசிகர்கள் காலையில் இருந்து காத்திருக்கின்றனர். 100 எபிசோடுகளை கடந்து டெலிகாஸ்ட் ஆகி கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. குறிப்பாக இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் சீரியலாக மாறியுள்ளது எதிர் நீச்சல் தொடர். பெண்களை அடிமையாக நினைக்கும் குடும்பத்தில் மாட்டி தவிக்கும் படித்த பெண்களின் கதை தான் எதிர் நீச்சல்.

    அந்த காரணத்தினால் தான் உனக்கு டைவர்ஸ் கொடுக்கல.. உண்மையை உளறிய பாரதி!

    ஹீரோயின் ஜனனியை பொய் சொல்லி ஏமாற்றி கல்யாணம் செய்து அவரின் கனவை சிதைக்கின்றனர். அண்ணன் குணா சொல்வதே தெய்வ வாக்கு என நினைக்கும், தம்பிகள் மனைவிகளை அடித்து துன்புறுத்துகின்றனர். ஒருமுறை ஜனனிக்காக சக்தி, குணாவிடம் சண்டை போட்டு விட்டார், அதை தாங்கி கொள்ள முடியாத குணா பிளான் செய்து இருவரைம் பிரிக்க நினைக்கிறார். அதனால் தற்போது சக்திக்கு புது பிசினஸ் தொடங்கி சக்தியை கோயம்புத்தூர் அனுப்பி வைக்கிறார்.

    அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்

    உடம்பு சரியில்லாமல் இருக்கும் ஜனனியை தனியாக விட்டுட்டு ஊருக்கு போகிறார் சக்தி. இதை ஜனனியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. ஜனனிக்கு காபி எடுத்து செல்கிறார் ஆதிரா. ஆனால் ரூமில் ஜனனி இல்லை. ஜனனியை காணவில்லை என ஆதிரா கத்த, குணா கோபத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். அதே கோபத்தில் அம்மாவையும் திட்டுகிறார்.



    நந்தினி தங்களிடம் சொல்லி விட்டு தான் ஜனனி வெளியே போனதாக கூறுகிறார். ஜனனி வேற எங்கும் செல்லவில்லை கோயம்புத்தூருக்கு தான். சக்தியை பார்க்க அங்கே சென்றுள்ளார். இந்த விஷயம் குணாவுக்கு தெரியாது. வீட்டுக்கு திரும்பி வந்த பின்பு குணா, இதற்கும் ஒரு பெரிய கச்சேரி வைக்க போவது உறுதி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி