சன் டிவி எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோடில் ஜனனிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சக்தி.
எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் உள்ளது. பெண்களை அடிமையாக பார்க்கும், இழிவாக நடத்தும் குடும்பத்தில் படித்த பெண் ஜனனி மாட்டிக் கொள்கிறார். கல்யாணம் என்ற பெயரில் குணசேகரின் குடும்பம் அவரை படித்த பெண் என்று கூட பார்க்காமல் பாடாய் படுத்துகிறது. அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து, தனது கனவை சாதிக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் ஒன்லைன். நந்தினி, ஜனனி, ஈஸ்வரி என குணசேகரின் வீட்டில் சிக்கி தவிக்கும் படித்த பெண்களை சுற்றி தான் இந்த சீரியல் நகர்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து இருக்கும் இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியல் மூலம் மீண்டும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
வெண்பாவை பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்ன பாரதி! கைத்தட்டிய குடும்பம்
கதைப்படி தற்போது ஜனனி அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார். ஈஸ்வரி அம்மாவின் சடங்குக்கு சென்றவர் அங்கிருந்து வேக வேகமாக அவரின் அம்மா வீட்டுக்கு சென்றார். ஜனனி அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போக, அதனால் ஜனனி அங்கிருந்து கிளம்பினார். ஃபோனில் சார்ஜ் இல்லாததால் அவரால் சக்தியிடம் இதை சொல்லவில்லை. இந்த விஷயத்தை குணாவின் மகன் வந்து வீட்டில் சொல்ல பிரச்சனை வெடிக்கிறது. உடனே குணா, சக்தியிடம் ஜனனி பற்றி தப்பு தப்பாக சொல்கிறார். சக்திக்கும் கோபம் தலைக்கு ஏறுகிறது.
இந்த விஷயம் ரஜினிக்கு தெரியுமா? படையப்பா சீனை பயன்படுத்திய ஜீ தமிழ் சீரியல்
நேற்றைய எபிசோடில் சக்தி, ஜனனிக்கு ஃபோன் செய்து பேசி சண்டை போடுகிறார். ஜனனி உண்மையை சொல்லியும் சக்தி ஏற்றுக் கொள்வதாக இல்லை. உடனே விட்டுக்கு வர சொல்கிறார் சக்தி. ஜனனி பேசிக் கொண்டிருந்ததை அவரின் அம்மா கேட்டு விட்டார். இந்நிலையில் ஜனனி காலையில் பஸ் பிடித்து வேக வேகமாக வீட்டுக்கு வருகிறார். குணா வழக்கம் போல் பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் ? என முழு நீள கிளாஸ் எடுக்கிறார்.
அதன் பின்பு ரூமுக்கு போகும் ஜனனிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார் சக்தி. ஜனனி சொல்லாமல் போனது தப்பு என பேசும் சக்தி, தன்னுடைய பெயரில் கம்பெனி ஆரம்பித்தது ஜனனிக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார். இதை கேட்டதும் ஜனனியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்து சீரியலில் என்ன நடக்கும்? என்பது இன்று இரவு எபிசோடில் தெரிய வரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.