Home /News /entertainment /

அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

அப்படி போடு.. முதன் முறையாக குணசேகரனை எதிர்த்து பேசிய ஈஸ்வரி!

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    எதிர் நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக குணசேகரனை எதிர்த்து பேசுகிறார் ஈஸ்வரி.

    சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. படித்த பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் குணா வீட்டில் கடைசி மருமகளாக வந்திருக்கும் ஜனனி இதுவரை குணா கட்டிய சாம்ராஜ்யத்தை  மொத்தமாக இடித்து நொறுக்கிறார். அவரிடம் போட்டி போட்டு போட்டு தோற்று போகிறார் குணா. இதனால் தம்பி சக்தியை ஜனனிக்கு  எதிராக மாற்றி கொண்டிருக்கிறார். கதைப்படி தற்போது ஈஸ்வரி அப்பாவின் சொத்தை விற்பதில் மிகப் பெரிய மான பிரச்சனையே சென்று கொண்டிருக்கிறது.

    மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

    குணாவின் எதிரியான எஸ்.கே.ஆர் குடும்பத்துக்கு ஈஸ்வரி அப்பா சொத்தை விற்கிறார். இது குணாவுக்கு பிடிக்கவில்லை. ஏற்கெனவே 10 லட்சம் பணத்தை அட்வான்ஸாக வாங்கி ஈஸ்வரி கையில் கொடுத்து விட்டார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத குணா தர்ஷன் மூலம் தடுத்து நிறுத்த நினைக்கிறார். தாத்தா சொத்து பேரனுக்கு தரட்டும் என வாதம் செய்கிறார். தர்ஷனின் மனசை மாற்றி ஈஸ்வரி, அப்பாவுக்கு  எதிராக பேச வைக்கிறர். இதனால் தர்ஷனும் பத்திரப்பதிவின் போது கையெழுத்து போட மாட்டேன் என அடம் பிடிக்கிறார்.

    மனைவியுடன் மீண்டும் சேர காத்திருக்கும் பிரபல சின்னத்திரை நடிகர்!

    இதனால் ஈஸ்வரி அப்பா உடைந்து போகிறார். ஆனால் கடைசி நேரத்தில் ஜனனி ஐடியா கொடுத்து அவரின் சொத்து  எஸ்.கே.ஆர்  கைக்கு மாறுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் குணா கொதித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.



    அதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது. ஈஸ்வரியை வெளியே நிற்க வைத்து கத்துகிறார் குணா. அவருடன் 2 தம்பிகள், அவரின் அம்மாவும் நிற்கின்றனர். வழக்கம் போல் ஈஸ்வரி அழுது மன்னிப்பு கேட்பார் என்று தான் நந்தினியும் ரேணுகாவும் நினைக்கின்றனர். ஆனால் அதுதான் இல்லை.  குணாவை எதிர்த்து திமிராக பேசுகிறார் ஈஸ்வரி. கணவரின் பெயரை விட தான் படித்த படிப்பு  தான் கவுரம் தருவதாக தலை நிமிர்ந்து  சொல்கிறார். இதை பார்த்து ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி. முழுமையான எபிசோடு இன்று இரவு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி