'திருமதி ஹிட்லர்' சீரியலில் இணைந்த முன்னணி நடிகர்!

'திருமதி ஹிட்லர்' சீரியலில் இணைந்த முன்னணி நடிகர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வரும் ஈஸ்வர் ரகுநாதன் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறார்.

  • Share this:
வெள்ளித்திரையில் மெகா ஸ்டார்களுடன் நடித்த அம்பிகா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லேட்டஸ்டாக இந்த சீரியலில் சின்னத்திரையில் நன்கு பிரபலமான முகமான ‘ஈஸ்வர் ரகுநாதனும்’ இணைந்திருக்கிறார். பழங்குடியின மக்களின் தலைவனாக நடிக்கும் அவர், இந்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், " திருமதி ஹிட்லர் சீரியலில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கிறேன். இந்த சீரியல் தான் நடிக்க இருக்கும் கதாப்பாத்திரம் உண்மையிலேயே எனக்கு மிகவும் சவாலாக உள்ளது. இதுவரை நடித்த கதாப்பாத்திரங்களைவிட வித்தியாசமானதாக இருக்கிறது. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என ரசிகர்களிடம், தன்னுடைய புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

200 எபிசோடுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் திருமதி ஹிட்லரின் சூட்டிங் அண்மையில் ஏற்காடு மலைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஈஸ்வர் ரகுநாதனின் ஃபோர்ஷன் அடங்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன. நடிகை அம்பிகா உள்ளிட்டோரும் இந்த சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். அம்பிகா உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்பபடங்களையும் ஈஸ்வர் ரகுநாதன் தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Also Read : ஆண் குழந்தை பிறந்துள்ளது - விஜய் டிவி பிரபலம் எமோஷன் பதிவு

திருமதி ஹிட்லர் சீரியலில், அமித் பார்க்கவ், கீர்த்தனா போட்வால், சௌமியா ராவ், பாவ்யா ஸ்ரீ, ஸ்வேதா செந்தில்குமார் உள்ளிடோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஈஸ்வர் ரகுநாதன் ஏற்கனவே பூவே பூச்சூடவா தொடரில் மகேந்திரன் கதாப்பாத்திரன் நடித்திருந்தார். அந்த கேரக்டர் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.

மேலும், ராஜா ராணி, கல்யாண பரிசு, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை, தேவதையைக் கண்டேன் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த சீரியலில், ஜெயம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் அம்பிகா, புதிய சீரியல்களிலும் கமிட்டாகி வருகிறார். லேட்டஸ்டாக, சன் டீவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், புகுந்த வீட்டில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் பூமிகாவுக்கு உதவ உள்ளார் அம்பிகா.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த வருணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பூமிகாவை, மாமியார் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்துகின்றனர். இதனை வெளியில் சொல்ல முடியமால் தவிக்கும் அவருக்கு, இந்த விஷயங்களை தெரிந்து வைத்திருக்கும் அம்பிகா தன்னால் இயன்ற உதவிகளை செய்து, அவள் படும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: