• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் தமிழில் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் - கதாநாயகன் யார் தெரியுமா?

கலர்ஸ் தமிழில் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் - கதாநாயகன் யார் தெரியுமா?

எங்க வீட்டு மீனாட்சி

எங்க வீட்டு மீனாட்சி

பேராசிரியையாக பணியாற்றும் மீனாட்சிக்கும், சிதம்பரத்துக்கும் இடையே காதல் ஏற்படுகிறது

  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18ம் தேதி முதல் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜீவா கதாநாயகனாக நடிக்கும் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவோம் என்பதற்கேற்ப தமிழ் சின்னத்திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு கலர்ஸ் தமிழ் செம டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சீரியல் உலகில் சன், விஜய், ஜீ தமிழ் தொலைகாட்சிகள் மூன்னணி இருக்கும் நிலையில், அவைகளை ஓவர்டேக் செய்ய புத்தம் புதிய சீரியல்களை இறக்கிக் கொண்டிருக்கிறது கலர்ஸ் தமிழ்.

    வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையின் பிரபலங்களைக் கொண்டு புதிய சீரியல்களை தயாரித்து வரும் கலர்ஸ் தமிழ், அக்டோபர் 18 ஆம் தேதி முதல் எங்க வீட்டு மீனாட்சி என்ற புத்தம் புது சீரியலை ஒளிபரப்ப உள்ளது. இந்த சீரியலில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜீவா, கதாநாயகனாக நடிக்கிறார்.

    இயக்குநர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதற்கான புரோமோவை கலர்ஸ் தமிழ் இப்போது வெளியிட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட புரோமோவில், இந்தக் கதையில் நிறைய மோதலும் இருக்கிறது காதலும் இருக்கிறது என கேப்சனிடப்பட்டுள்ளது.

    பேராசிரியையாக பணியாற்றும் மீனாட்சிக்கும், சிதம்பரத்துக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. கூட்டுக்குடும்பமாக வாழும் வீட்டில் சிதம்பரத்தை, குடும்ப புகைப்படத்தில் நிற்க கூடாது என வள்ளியம்மை கட்டளையிடுகிறார். இவர்களுக்கு இடையிலான காதலையொட்டி நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து தொடர் விறுவிறுப்பாக செல்ல உள்ளது. இப்போது வெளியாகியிருக்கும் புரோமோ, சீரியல் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜீவாவைப் பொறுத்த வரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் சந்தானம் சென்றவுடன், லொள்ளு சபாவில் நடித்து பிரபலமானார். அவருக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி, நினைத்தாலே இனிக்கும், கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக சந்தானம் - ஜீவா கூட்டணியில் வெளியான பிஸ்கோத்து படத்தில் நடித்தார். வெள்ளித்திரை ரவுண்டுக்குப் பின் மீண்டும் சினத்திரைக்கு திரும்பியிருக்கும் அவருக்கு, இந்த தொடர் கைகொடுக்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்து உள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    இதேபோல், பூர்ணிமா பாக்யராஜூம் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவரும், ரசிகர்களின் ரசணைக்கு ஏற்ப கதை இருப்பதாகவும், இதனால் விரைவில் மக்களின் அபிமானத்தை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அக்டோபர் 18 ஆம் தேதி முதல் காதலும், மோதலும் நிறைந்த குடும்ப தொடராக எங்க வீட்டு மீனாட்சி ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராக உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: