இரண்டு எம்மி விருதுகளை மட்டும் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்! ரசிகர்கள் ஏமாற்றம்

பிரியங்கா சோப்ராவின் கணவர் வழி உறவினரான SOPHIE TURNER கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு எம்மி விருதுகளை மட்டும் பெற்ற கேம் ஆஃப் த்ரோன்! ரசிகர்கள் ஏமாற்றம்
எம்மி விருதுகள்
  • News18
  • Last Updated: September 23, 2019, 10:13 PM IST
  • Share this:
அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான எம்மி விருது விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேம் ஆஃப் த்ரோன்ஸ் இரண்டே இரண்டு விருதுகளை மட்டுமே பெற்று ஏமாற்றமளித்தது.

சிறந்த தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர்களுக்கான 71-வது எமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. ஆஸ்கர் விருதுகளைப் போலவே எமி விருது விழாவும் தொகுப்பாளர் இல்லாமல் நடத்தப்பட்டது.

மொத்தம் 24 ஆயிரம் பேர் இந்த விருதுக்கான தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். நாடகம், காமெடி, குறுகிய காலத் தொடர், ரியாலிட்டி ஷோ என பல்வேறு பிரிவுகளிலும் விருதுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. 8 சீசன்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாடகம் மட்டும் 32 பிரிவுகளில் நடப்பாண்டில் மட்டும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


ஆனால் சிறந்த நாடகம் மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் மட்டுமே இந்த தொடருக்கு விருது கிடைத்தது. பிரியங்கா சோப்ராவின் கணவர் வழி உறவினரான SOPHIE TURNER கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை. சிறந்த நகைச்சுவை தொடருக்கான விருதை அமேசானின் வெப் தொடரான Fleabag வென்றது.

இதேபிரிவில் சிறந்த எழுத்து மற்றும் சிறந்த நடிகை என இரண்டு விருதையும் போபே வாலர் பிரிட்ஜ்(Phobe waller bridge) தட்டிச்சென்றார். டிராமா பிரிவில் கில்லிங் EVE தொடரில் நடித்த ஜோடி கோமர் சிறந்த நாயகியாகவும், pose நாடகத்தில் நடித்த billy porter சிறந்த நாயகனுக்கான விருதையும் பெற்றனர். சிறந்த ரியாலிட்டி ஷோவிற்கான விருது RUPAUL's DRAG Race-க்கு கிடைத்தது.

Also see:
First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading