Home /News /entertainment /

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

ஈரமான ரோஜாவே சீரியலின் பார்ட்-2 வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், இதில் ஹீரோவாக நடிகர் சித்தார்த்தும் மற்றும் ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் கேப்ரியலா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

    பிரபல ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பட்டு வந்த சீரியல்களில் ஈரமான ரோஜாவே தொடரும் ஒன்று. இந்த பொழுதுபோக்கு சீரியல் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. ஈரமான ரோஜாவே தொடரை பிரான்சிஸ் கதிரவன் முன்னர் இயக்கி வந்தார். அதன் பிறகு ரிஷி என்பவர் கதையை இயக்கினார். மேலும் இத்தொடரின் ஒளிப்பதிவாளராக ரமேஷ் துரை பணிபுரிந்தார்.

    இந்த சீரியல் தொடங்கப்பட்டதில் இருந்து மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது என்றும் சொல்லலாம். இந்த தொடரில் மலராக பவித்ரா நடித்திருந்தார். வெற்றி கதாபாத்திரத்தில் நடிகர் திரவியம் நடித்திருந்தார். இவர்களுடன் சியாம், சாய் காயத்ரி போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களாக மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் பட்டியலில் ஈரமான ரோஜாவே சீரியலும் ஒரு இடம் பிடித்திருந்தது.

    Also Read : விஜய் சேதுபதியும் வில்லங்கமும்.. ஜல்லிக்கட்டு டூ பெங்களூரு விமான நிலையம் வரை

    ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பவித்தரா மற்றும் திரவியம் ஆகியோருக்கு எந்த எந்தளவு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவுக்கு சாய் காயத்ரி மற்றும் சியாமிற்கும் இருந்தனர். ஆனால், திடீரென இந்த சீரியல் மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் இந்த சீரியல் நிற்கப்போகிறது என நிறைய வதந்திகள் எல்லாம் பரவியது. ஆனால், சீரியல் நிறுத்தப்படாமல் மதிய நேரத்திற்கு மாற்றப்பட்டது. இருப்பினும், ஈரமான ரோஜாவே சீரியல் மக்களின் ஆதரவோடு தான் ஓடிக் கொண்டிருந்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரமான ரோஜாவே சீரியலுக்கான வெற்றிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியை விஜய் டிவி ஏற்பாடு செய்தது. அதன்பிறகு தான் தெரிய வந்தது சீரியல் நிறைவடைய போகிறது என்று. கடந்த 3 வருடங்களாக சீரியல் ஒளிபரப்பட்டு வந்த நிலையில், சீரியல் நிறுத்தப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    also read.. சேனல் டிஆர்பிக்காக யோசித்த ஜீ தமிழ்.. முதலில் வந்த பெயர் வனிதா விஜயகுமார்!

    ஆனால், தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் குழுவினர் தங்களது ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்பச் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதாவது, ஈரமான ரோஜாவே சீரியலின் பார்ட்-2 வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், இதில் ஹீரோவாக நடிகர் சித்தார்த்தும் மற்றும் ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் கேப்ரியலா இருவரும் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தியால் சீரியலின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி