சின்னத்திரை பிரபலங்கள் பலர் இருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை பெறுவார்கள். அவர்களின் திறமை மற்றும் அற்புதமான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். பொதுவாக மக்களின் மனங்களில் முக்கிய இடத்தை பிடித்து விட்டாலே அடுத்தடுத்து பல உயரங்களை அடைய முடியும். அதிலும் பலர் சின்னத்திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பின்னர் மிக பெரிய அளவிற்கு சாதனைகளை செய்துள்ளனர்.
தமிழ் திரை துறையில் மட்டுமன்றி பிற மொழி திரை துறைகளிலும் நடித்து அசத்துவார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்த பலரும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி தொடர்களிலும் நடித்து வருகின்றனர். அதன் பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இதன் மூலம் பெறுவார்கள். இப்படியொரு சிறப்பான வாய்ப்பு தான் சின்னத்திரை பிரபலம் திரவியம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க.. விமர்சனங்களை கடந்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை!
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். சின்னத்திரையில் இவர் கதாநாயகனாக நடித்த முதல் சீரியலே வெற்றிநடை போட்ட பின் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பவித்ரா நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான மற்ற தொடர்களை போன்றே இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர். பவித்ரா மற்றும் திரவியம் ஆகியோரின் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பலர் தொடர்ந்து பார்த்து வந்தனர். இவர்களுடைய ரொமன்ஸ் சீன்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
இதையும் படிங்க.. ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவரா ரஜினி?
இதற்கு அடுத்தாக இவர் சில குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதே போன்று சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. இவர் நேசித்த பெண்ணை இவரது அண்ணனிற்கு திருமணம் செய்யும் இக்கட்டான சூழல் சீரியலில் ஏற்பட்டுள்ளது. அதே போன்று இவருக்கு அந்த பெண்ணின் அக்காவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இப்படியாக இந்த தொடரில் பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள் வந்துள்ளன. இந்த 2 ஜோடிகளும் எப்படி தனது வாழ்க்கையை தேர்வு செய்ய போகிறார்கள், இந்த விருப்பம் இல்லாத வாழ்க்கை தொடருமா, இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படியாக தமிழில் இது போன்ற பல டாப் தொடர்களில் திரவியம் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, தெலுங்கிலும் இவர் தற்போது நியூ என்ட்ரி தர போகிறார். அதன்படி இவர் தெலுங்கில் 'வண்டலக்கா' என்கிற சீரியலில் நடிக்க உள்ளார்.
இதன் மூலம் முதல் முறையாக தெலுங்கு சீரியலில் நடிகர் திரவியம் நடிக்க உள்ளார். இந்த தொடர் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.