சீரியலால் மாறிப்போன வாழ்க்கை... ஈரமான ரோஜாவே வெற்றிக்கு இதுதான் நடந்தது!

ஈரமான ரோஜாவே வெற்றி

இந்த சீரியலில் நடித்த பவித்ரா அடுத்த சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கமிட் ஆகிவிட்டார்.

 • Share this:
  விஜய் டிவி ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த திரவியம் குறித்து பலரும் அறியாத தகவல்கள்.

  வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ஏக்கப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சீரியலில் அவர்களின் கதாபாத்திரத்தை ரசிக்க தொடங்குபவர்கள் போக போக அவர்களையே ரசிக்க தொடங்கி விடுகின்றனர். அவர்களின் நடிப்பும் தோற்றமும் ரசிகர்களை கவர, அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணமாகிறது. அந்த வகையில் ஒரு சீரியல் மூலமாகவே பல லட்ச ரசிகர்களை சொந்தமாக்கியவர் ஈரமான ரோஜாவே வெற்றி. இவரின் நிஜப்பெயர் திரவியம். குறிப்பாக வெற்றிக்கு பெண் ரசிகைகள் தான் ஏராளம். திருமணத்திற்கு பிறகு தான் சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது இருந்த போதும் பெண் ரசிகைகளை கவர்ந்து விட்டார் வெற்றி. சீரியலில் இவருக்கும் மலருக்குமான காதல் காட்சிகள் பெரிய அளவில் ஹிட்டானதும் ஒரு காரணம்.

  வெற்றியின் சொந்த ஊர் கோயம்புத்தூர். கல்லூரியில் விஸ்காம் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தவர் புகைப்படத்துறையில் நுழைந்தார். பல நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளார். அதை அப்படியே வளர்க்க, 3 வருடங்கள் அனிமேஷன் கல்வியையும் முடித்தார். அதுத்தொடர்பான வேலையும் செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் வெற்றியின் கல்யாணம் நடந்தது. தனது நீண்ட நாள் காதலியான ருதுவை திருமணம் செய்து கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது தான் ஈரமான ரோஜாவே சீரியல் வாய்ப்பு வெற்றிக்கு வந்தது. ஆடிஷனில் கலந்து கொண்டவர் செலக்ட் ஆகி லீட் ரோலில் நடிக்க தேர்வானார். இந்த சீரியல் மூலம் அவருக்கு மிகப் பெரிய ரீச் கிடைத்தது. காதல், ஆக்ஷன் சீன்ஸ் என அனைத்திலும் ரசிகர்களிடம் ஸ்கோர் வாங்கினார். தொடர்ந்து தனது மனைவி மற்றும் செல்ல மகளுடன் விஜய் டிவியின் மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கமலின் தீவிர ரசிகரான இவர், ஒருமுரை அவரை சந்தித்து ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்பதையே நீண்ட நாள் ஆசையாக கொண்டுள்ளார்.
  ஈரமான ரோஜாவே சீரியல் 803 எபிசோடுகளுக்கு பின்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 3 வருடமாக தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்து ரசிகர்களிடம் ஏகோபித்து வரவேற்புடன் நிறைவடைந்தது. இந்த சீரியலில் நடித்த பவித்ரா அடுத்த சீரியலான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கமிட் ஆகிவிட்டார். வெற்றியும் நல்ல கதைக்கு வெயிட்டிங். சில படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. சிறிய புகைப்பட கலைஞராக இருந்த வெற்றியின் மொத்த வாழ்க்கையும் ஈரமான ரோஜாவே சீரியல் மாற்றிவிட்டது என்பதே உண்மை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: