Home /News /entertainment /

மாறிப்போன ஜோடி... சூடு பிடிக்கும் ஈரமான ரோஜாவே 2 கதைகளம்!

மாறிப்போன ஜோடி... சூடு பிடிக்கும் ஈரமான ரோஜாவே 2 கதைகளம்!

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவி சீரியல்

ஈரமான ரோஜாவின் சீசன் 2 கதை எதை சுற்றி அமைந்துள்ளது என்பதையும் சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கு முன்பு வெளியான டீஸரில் தெரிந்தது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் தான் இதிலும் ஹீரோ. இவருக்காகவே ஈரமான ரோஜாவே சீரியலை பார்க்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். மற்றொரு ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார். திரவியத்தின் ஜோடியாக ஸ்வாதி மற்றும் சித்தார்த்தின் ஜோடியாக கேப்ரியல்லா நடிக்கின்றனர். இந்த வாரம் வெளியாகியுள்ள சீரியலின் புரோமோ வைரலாக வருகிறது.

    புதிதாக ஒரு சீரியல் தொடங்கும்போது சீரியலின் கதைக்களத்தின் முக்கிய புள்ளியை அதன் முதல் ப்ரமோவில் அல்லது டீசரிலேயே வெளிப்படுத்தி விடுவார்கள். ஈரமான ரோஜாவின் சீசன் 2 கதை எதை சுற்றி அமைந்துள்ளது என்பதையும் சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கு முன்பு வெளியான டீஸரில் தெரிந்தது.

    சீரியலின் கதைப்படி திரவியம் மற்றும் கேப்ரியல்லா, இருவரும் அவரவர் குடும்பத்தின் இரண்டாவது பிள்ளைகள். திரவியத்துக்கு அண்ணனும், கேப்ரியல்லாவுக்கு அக்காவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். எதேச்சையாக திரவியத்தின் சகோதரர் மற்றும் கேப்ரியெல்லாவின் அக்காவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் பொழுது மணப்பெண் ஸ்வாதி கடத்தப்படுவதால் அண்ணனுக்கு கேப்ரியல்லாவை திருமணம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ஆனால், கடத்தப்பட்ட மணப்பெண்ணை திரவியம் காப்பாற்றி மண்டபத்துக்கு அழைத்து வருவார். ஏற்கனவே சித்தார்த் மற்றும் கேப்ரியலாவுக்கு திருமணம் முடிந்து விட்டதால், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வார்கள். ஒரே குடும்பத்தில் சகோதரிகள் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் இளைய சகோதரியான கேப்ரியல்லா மூத்த மருமகளாகவும், மூத்த பெண்ணான ஸ்வாதி இளைய மருமகளாகவும் வீட்டுக்குச் செல்கின்றனர்.

    சூடாக இருந்த கோதையை தன் ஸ்டைலில் கூலாக்கிய சரஸ்வதி!


    இந்த இரண்டு ஜோடிகளை பற்றி தான் கதை. இதில் திரவியம் மற்றும் கேப்ரியல்லாவின் காதல் யாருக்குமே தெரியாது. அவ்வாறு தெரிய வரும் பொழுது குடும்பத்தில் எந்தவிதமான குழப்பங்கள் ஏற்படும் என்பது சுவாரஸ்யமாக காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடந்த வாரம் இரண்டு வாரங்களாக திருமண காட்சிகள் ஒளிபரப்பானது. இப்போது இரண்டு ஜோடிகளும் வீட்டுக்கு வந்துள்ளனர். இதையடுத்து தற்போது வெளியான இந்த வார புரோமோவில் சித்தார்த் மற்றும் திரவியத்தின் தந்தை, திருமணம் எப்படியோ நடந்து விட்டது, இனி இருவரும் இரண்டு ஜோடிகளும் வாழ வேண்டும்; அதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறும் காட்சிகள் உள்ளன.

    காதலித்தவரை திருமணம் செய்து கொள்ள முடியாத துயரத்தில் இருக்கும் கேப்ரியல்லா நீங்கள் விருப்பப்பட்டதால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், எங்களால் நீங்கள் சொன்ன உடனேயே சேர்ந்து வாழ முடியாது எங்களை மன்னித்து விடுங்கள் என்று கூறி அழுது கொண்டே இருப்பது போல காட்சிகள் உள்ளன. அதேபோல காதல் விரக்தியில் மற்றொரு புறம் திரவியமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன. இருவருக்குமே முதலிரவு ஏற்பாடுகள் நடக்கப்பட்டு அவரவர் படுக்கை அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

    இதில் கேபிரியல்லா அந்த வீட்டின் மூத்த மகனான தன் கணவரிடம் எரிந்து விழுகிறார். அதே நேரத்தில் திரவியத்தின் மனைவியான ஸ்வாதி தன் கணவருக்காக முதலிரவு அறையில் காத்திருக்கிறார். இந்த சீரியல் இனி எவ்வளவு சுவாரஸ்யமாக செல்ல போகிறது என்ற ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Entertainment, Vijay tv

    அடுத்த செய்தி