அலையாத இடமில்லை... காபி ஷாப் மூலம் கிடைத்த வாய்ப்பு! ஈரமான ரோஜாவே புகழ் ஸ்டோரி

ஈரமான ரோஜாவே சீரியல் புகழ்

காபி ஷாப்பில் வைத்தே தனக்கு சினிமா மேல் இருக்கும் காதலையும் நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார்.

 • Share this:
  ஈரமான ரோஜாவே சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்து பெண் ரசிகைகளை கவர்ந்த நடிகர் ஷியாம் பற்றி சுவாரசிய தகவல்கள்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் டூப்பர் சீரியல் ஈரமான ரோஜாவே. அண்மையில் நிறைவடைந்த இந்த சீரியலில் புகழ் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஷியாம். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் சினிமா மீது கொண்ட தீராத காதலால் சென்னை வந்தார். இங்கு வந்து பட வாய்ப்புகள் கேட்டு தயாரிப்பு நிறுவனங்கள் படி ஏறினார். ஆனாலும் பலனில்லை. பார்ப்பதற்கு ஹிந்தி ஹீரோ போல் இருக்கும் ஷியாமை அவரின் நண்பர்கள் பாலிவுட்டில் வாய்ப்பு தேடும்படி அறிவுருத்தினர். இதனால் மும்பை புறப்பட்டு சென்ற அவர், சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனாலும் பயனில்லை. அதனால் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டார்.

  இதற்கிடையில் பணத்திற்காக மார்க்கெட்டிங் வேலையும் செய்து வந்தார். அப்போது தான் முதன்முதலில் ஷியாமுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான புதுக்கவிதை சீரியல் மூலம் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பிடித்து கொண்டவர் தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, கண்ணம்மா, அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் இவரின் நடிப்பில் சன் டிவி, விஜய் டிவியில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிப்பரப்பாகின.

  ஆனாலும் ஷியாமுக்கு வெள்ளித்திரை செல்வது தான் மிகப்பெரிய கனவாக இருந்தது. டான்ஸ் ஷோ, ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது வாய்ப்பை வெளிப்படுத்தினார். ஈரமான ரோஜாவே சீரியலில் புகழ் கதாபாத்திரம் ஷியாமுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. புகழ்-அகிலா ஜோடிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது தான் ஷியாம் வாழ்க்கையில் அந்த மேஜிக் நடந்தது. தனது நண்பர்களுடன் காபி ஷாப் சென்ற ஷியாம்,  இயக்குனர் கெளதம் மேனனை சந்தித்தார். அந்த காபி ஷாப்பில் வைத்தே தனக்கு சினிமா மேல் இருக்கும் காதலையும் நடிப்பு திறமையும் வெளிப்படுத்தின ஷியாமுக்கு கெளதம் உடனே கிரீன் சிக்னல் கொடுக்க அடுத்த சில தினங்களிலே அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாகசைதன்யாவின் நண்பராக நடித்தார்.  அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ஷியா நடிப்பு என்று வந்துவிட்டால் படு சின்சேயராக இறங்கிவிடுவாராம். நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து பர்சனல் லைஃபிலும் ஜெயித்து காட்டிவிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: