• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஆங்கராக தொடங்கிய பயணம்... விஜய் டிவியில் தொடர்ந்து பவித்ராவுக்கு லீட் ரோல் தர நிஜ காரணம்!

ஆங்கராக தொடங்கிய பயணம்... விஜய் டிவியில் தொடர்ந்து பவித்ராவுக்கு லீட் ரோல் தர நிஜ காரணம்!

சின்னத்திரை நடிகை பவித்ரா

சின்னத்திரை நடிகை பவித்ரா

ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிடு இல்லைனா பாடிகிட்டு தூங்கிடுதான் இருப்பாராம்

  • Share this:
    விஜய் டிவியில் புதியதாக ஒளிப்பரப்பாக தொடங்கியுள்ள ’தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் மீண்டும் லீட் ரோலில் நடிக்கிறார் நடிகை பவித்ரா ஜனனி.

    ஆங்கராக பயணத்தை தொடங்கி சீரியலில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று தொடர்ந்து 2 சீரியல்களில் லீட் ரோலில் கலக்குகிறார் பவித்ரா. இவரின் திறமையைக் கண்டு விஜய் தொலைக்காட்சி அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது. முதலில் இவருக்கு கதாநாயகி ரோல் எல்லாம் செட் ஆகாதுன்னு பலரும் கேலி செய்துள்ளனர். அதன் பிறகு தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வெற்றி கண்டுள்ளார்.ஈரமான ரோஜா சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார்.

    சென்னையில் பிறந்த இவர் ஆல்பா ஆர்ட்ஸ் அண்ட்ஸ் சயின்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே m.phil படிப்பை முடித்தார்.இதற்கு உறுதுணையாக இருந்தது அவரின் குடும்பமும் நல்ல நண்பர்களும் தானாம்.

    பிரைடல் லுக்கில் பவித்ரா


    பவித்ரா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கலாய்ப்பார் செம்ம ஹாலி கேரக்டர். அதுமட்டுமில்லை சின்னத்திரையில் இவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் கூட்டம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாடு இல்லைனா பாடிகிட்டு தூங்கிட்டுதான் இருப்பாராம் .நம்ப வீட்டு நட்சத்திரம் என்று ஒரு நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்தார். புதுயுகம் தொலைக்காட்சியில் உணவு மற்றும் அழகு சார்ந்த நிகழ்ச்சியையும் ஆங்கரிங் செய்திருக்கிறார்.படிபடியாக தன்னை வளர்த்துக் கொண்டு விஜய் டிவியில் ஆஃபிஸ் சீரியலில் நடித்தார். அப்படியே மெல்ல மெல்ல வாய்ப்புகள் அவரைத் தேடி வர தொடங்கியது. ரியோ நடித்த சரவனன் மீனாட்சி தொடரில் பவித்ராவின் நடிப்பு பெரிதும் கவர்ந்திருந்தது.

    பவித்ரா என்றாலே புடவையில் தான் அழகு என்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு ஏற்றார் போல் புதிய சீரியலிலும் புடவையிலேயே அசத்துக்கிறார் பவித்ரா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: