Home /News /entertainment /

பிரியாவிடம் மிகப் பெரிய பொய்யை சொன்ன ஜீவா! ஈரமான ரோஜாவே சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

பிரியாவிடம் மிகப் பெரிய பொய்யை சொன்ன ஜீவா! ஈரமான ரோஜாவே சீரியலில் அடுத்த ட்விஸ்ட்

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவின் சீசன் 2 கதை எதை சுற்றி அமைந்துள்ளது என்பதை சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது

    ஈரமான ரோஜாவே முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து, ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம் தான் இதிலும் ஹீரோ. இவருடன் தேன்மொழி எம்.பி.ஏ சித்தார்த்தும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவின் சீசன் 2 கதை எதை சுற்றி அமைந்துள்ளது என்பதை சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சீரியல்,  ஜோடி மாறி திருமணம் ஆன பிறகும் மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.

    பார்த்திக்கு பிரியாவுடன் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜோடி மாறி ஜீவாவின் காதலி காவ்யா பார்த்திக்கு மனைவி ஆனார். அதே போல் பிரியா கழுத்தில் ஜீவா தாலி கட்டினார். விபத்து போல் நடந்த இந்த திருமணத்தை பிரியாவும் பார்த்தியும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ஜீவா - காவ்யாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த மொத்த உண்மையும் தெரிந்தவர் பிரியா - காவ்யாவின் அம்மா மட்டும் தான்.

    கடைசியில இப்படி ஆயிடுச்சு.. ரசிகர்களை ஏமாற்றிய பிரியங்கா – ராஜூ!

    பிரியாவும் ஜீவாவை இம்ப்ரஸ் செய்ய ஏதோ ஏதோ செய்கிறார். ஆனால் ஜீவா தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருகிறார். அதே போல தான் பார்த்தி,  என்ன தான் அன்பாக பேசினாலும் காவ்யாவுக்கு காதலனை மறக்க முடியவில்லை. இதனால் பார்த்தியை விவாகரத்து செய்யும் அளவுக்கு காவ்யா வந்து விட்டார். இந்த சோகத்தில் நேற்று பாய்ங்கரமாக குடித்த ஜீவா, பிரியாவின் அப்பாவிடம் மாட்டிக் கொண்டார். தனது கணவருக்கு ஏன் இந்த குடி பழக்கம் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் பிரியா கண்ணீர் வடிக்கிறார்.

    இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி சாம்பார்.. இன்னிக்கே வீட்ல ட்ரை பண்ணுங்க!



    இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவாவிடம் பிரியா காரணத்தை கேட்க, அதற்கு மிகப் பெரிய பொய்யை ஜீவா சொல்லிவிடுகிறார். அதாவது, நான் வேறொரு பெண்ணை காதலித்தேன் என்று ஜீவா சொல்ல, யார் அந்த பெண் என்று பிரியா கேட்கிறார். அதை சொல்ல மறுத்த ஜீவா, நான் மட்டும் தான் அந்த பெண்ணை காதலித்தேன் அவர் என்னை காதலிக்கவில்லை என பொய் சொல்லி உண்மையை மறைத்து விடுகிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெறுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி