• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • மதுரைக்கார பொண்ணு.. சென்னைக்கு வந்தது ஏன்? சீரியல் நடிகை சாய் காயத்ரி கம்பெனி ரகசியம்!

மதுரைக்கார பொண்ணு.. சென்னைக்கு வந்தது ஏன்? சீரியல் நடிகை சாய் காயத்ரி கம்பெனி ரகசியம்!

ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி பற்றி பலருக்கும் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 • Share this:
  eeramana rojave akila pugazh : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து புகழ் பெற்ற சாய் காயத்ரி மதுரையைச் சேர்ந்த்வர். ஆனால் அவர் எதனால் சென்னை வந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

  விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே இந்த பெருமை கிடைத்துவிடும். ஒரு சீரியலில் தலைக்காட்டினாலே போதும் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். ரசிகர்களும்  அவர்களை விரும்ப தொடங்கி விடுவார்கள்..

  இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ பெயரை சொல்லலாம். மற்ற சேன்களில் மெயின் ரோலில் நடிக்கும் நடிகைகளைக் காட்டிலும் விஜய் டிவியில் சைடு ரோலில் நடிப்பவர்கள் சீக்கிரமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார்கள். அது விஜய் டிவிக்கே உரித்தான ராசி. அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் விஜய் டிவியில் நுழைந்த சாய் காயத்ரி இப்போது இளைஞர்கள் மத்தியில் படு ஃபேமஸ்.

  also read அம்மாடி வெண்பா உன் பாட்சா சவுந்தர்யாம்மா கிட்ட பலிக்குமா?

  மதுரையை சேர்ந்த இவர் படிப்பதற்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துக்கொண்டே மாடலிங்கும் செய்தார். அதுமட்டுமில்லை இவருக்கு விஜே, ஆர்ஜே , ஆங்கர் என பல முகம் உண்டு.

  தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அப்போது தான் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.

  2011ல் விஜய் டிவியின் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் தனது நடிப்பை ஆரம்பித்தார். அதில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்தார். இவரின் குரல் மிகவும் இனிமையாக இருப்பதால் இவருக்கு டப்பிங் தேவைப்படாது. ஜெயா டிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு ’சிவா மனசுல சக்தி’ ’சரவணன் மீனாட்சி’ சீரியல்களிலும் நடித்தார். ஆனால் ஈரமான ரோஜாவே சீரியல் காயத்ரியை வேற அளவில் ரீச் செய்தது.. இந்த தொடரில் வரும் அகிலா-புகழ் ஜோடியின் ரொமான்ஸ், சண்டை சீன்களுக்கு ஃபேன்ஸ் அதிகம். கூடிய விரைவில் இந்த சீரியல் முடிய இருப்பதாக அவரே வெளியிட்ட தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  S A I G A Y A T R I இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@saai_gayatri)


  காயத்ரியின் “Lets Do Events” என்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி பற்றி பலருக்கும் வெளியில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல், Lets Dance Studio என்ற டான்ஸ் ஸ்டூடியோவும் இவருடைய தான் என்ற தகவலும் சின்னத்திரையில் உலாவி கொண்டிருக்கிறது. ஒருபக்கம் நடிப்பு ஒருபக்க பிசினஸ் என பறந்துக்கொண்டிருக்கும் இவருக்கு முழு பக்கபலமாக இருப்பது அவருடைய குடும்பம் தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: