ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஈரமான ரோஜாவே காவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா! அவரே வெளியிட்ட வீடியோவ பாருங்க..

ஈரமான ரோஜாவே காவ்யாவுக்கு இப்படி ஒரு நிலைமையா! அவரே வெளியிட்ட வீடியோவ பாருங்க..

நடிகை கேப்ரியெல்லா

நடிகை கேப்ரியெல்லா

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவ்யாவாக நடித்து வரும் கேப்ரியெல்லா யூடியூப்பில் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வெற்றிப்பெற்றதையடுத்து, ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். இந்த சீரியலில் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரியெல்லா நடித்து வருகிறார்.

  கேப்ரியெல்லா விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் பங்குப்பெற்றுள்ளார். 7 சி என்ற சீரியலிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சீரியல் மட்டுமில்லாமல் ‘3’படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் நடித்திருப்பார். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அதன் பின்பு தான் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கேப்ரியெல்லாவுக்கு கிடைத்தது.

  கேப்ரியெல்லா சீரியலில் நடிப்பதில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்து வருகிறார். இந்த யூடியூப் சேனலில் மேக்கப் தொடர்பான வீடியோஸ்,டூர் சென்ற வீடியோ, ஃப்ரிட்ஜ் டூர் என பல வீடியோக்களை பகிந்துள்ளார்.அவர் பதிவிட்ட வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. இந்நிலையில் கேப்ரியெல்லா ‘இப்படி ஒரு நிலைமையா’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் சமீபத்தில் அவர் வாங்கிய புதிய கார் ரிப்பேர் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

  புதிய கார் வாங்கிய வீடியோ:

  ' isDesktop="true" id="761580" youtubeid="ZKjF_S6PDN4" category="television">

  வீடியோவின் தொடக்கத்திலேயே ‘என் கார் போச்சு’ என்று சோகமாக ஆரம்பிக்கிறார் கேப்ரியெல்லா.எந்த ஒரு புதிய பொருளும் வாங்கியவுடன் பழுது ஏற்பட்டால் கஷ்டமாக தானே இருக்கும், அதே கஷ்டத்துடன் தான் கேப்ரியெல்லா பேசுகிறார்.

  also read : ஒரு கணம் ஒரு போதும் பிரிய கூடாதே! நயன்- விக்கி ஹனிமூன் போட்டோஸ் வைரல்

  கார் எப்போது வாங்கப்பட்டது என்ற விவரத்தை கூறி காரில் என்னலாம் பிரச்சனைகள் ஏற்பட்டது என்று ஒவ்வொன்றாக கூறுகிறார்.பின்பு சர்வீஸ் முடிந்த வந்த காரை ஓட்டிப்பார்த்து சரியாக இருக்கிறதா என்று செக் செய்துக்கொண்டார்.

  தற்போது வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ:

  ' isDesktop="true" id="761580" youtubeid="x80O_2qzVIY" category="television">

  ‘ நான் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோ, கேபிற்கு வெயிட் பண்ணி படத்துக்கு கூட ஒழுங்கா போக முடியல, இனி கார்-ல நிம்மதியா போவேன், அதே மாதிரி வண்டில எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் உடனே சர்வீஸ் கொடுத்துடுங்க’ என்று அட்வைஸும் செய்தார் கேப்ரியெல்லா.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Vijay tv