முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஈரமான ரோஜாவே சீரியலுக்கு வந்த சோதனை.. விக்ரம் பட பாடலை போட்டது குத்தமா?

ஈரமான ரோஜாவே சீரியலுக்கு வந்த சோதனை.. விக்ரம் பட பாடலை போட்டது குத்தமா?

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

இந்த வீடியோவை லோகேஷ் கனகராஜ் பார்த்து விட கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :

ஈரமான ரோஜாவே சீரியல் புரமோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் கண்ணில் இந்த புரமோ பட்டுவிட கூடாது என்பதையும் அவர்கள் பதிவு செய்ய மறக்கவில்லை. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே'. இதில் திரவியம் மற்றும் பவித்ரா ஜனனி லீட் ரோலில் நடித்தனர். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போக சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கியது. முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது ஈரமான ரோஜாவே 2 ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் லீட் ரோலில் திரவியம் , ஸ்வாதி கோண்டே , கேப்ரில்லா சார்ல்டன், சித்தார்த் குமரன் ஆகியோர் நடிக்கின்றனர். தம்பி காதலித்த பெண்ணை அண்ணனும், அண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை தம்பியும் என மாறி மாறி நடக்கும் இவர்களின் திருமணம், அதன் பின்பு அரங்கேறும் திருப்பங்கள் தான் இந்த சீரியலின் ஒன்லைன்.

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்? வெளியான தகவலால் சோகத்தில் ரசிகர்கள்!

ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காதலை மறக்க முடியாமல் ஜீவா, காவ்யா படும் கஷ்டம், பார்த்தி, பிரியாவின் குழப்பம் என சீரியல் டாப் கியரில் சென்றது. இப்போது கதைப்படி ஜீவாவும் பிரியாவும், பார்த்தியும் காவ்யாவும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி வருகின்றனர். காவ்யா தேர்வு எழுத பெங்களூர் சென்று இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பாக பார்த்தியும் உடன் சென்று இருக்கிறார்.

காவ்யா சென்ற பஸ் , கலவரத்தில் மாட்டிக் கொள்ள அந்த நேரம் பார்த்தி தான் காவ்யாவின் உயிரை காப்பாற்றி அங்கிருந்து காலேஜூக்கு அழைத்து செல்கிறார். இருவரும் ஜீப்பில் செல்ல அப்போது வில்லன்கள் இவர்களிடம் பிரச்சனை செய்கின்றனர். இந்த சண்டை சீனை இயக்குனர் மாஸாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சமீபத்தில் வெளியான வெற்றி படமான ’விக்ர’ம் படத்தில்  இடம்பெற்ற  'eagle is coming' பாடலை பின்னணியில் பிளே செய்கிறார்.

இதுதான் இப்போது ட்ரோலுக்கு காரணமாகியுள்ளது. இந்த புரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியொரு மாஸான பாடலை இப்படியா காப்பி அடிப்பது? என கோபத்தில் பொங்கியுள்ளனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து பல கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்த வீடியோவை லோகேஷ் கனகராஜ் பார்த்து விட கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். சின்னத்திரையில் இந்த ட்ரோல்  முதல் முறை அல்ல, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என பல சீரியல்களில் இதுப்போன்ற திரைப்பட காட்சிகள், பாடல்கள் ரீ கிரியேட் செய்யப்பட்டு அவை ட்ரோலுக்கும் ஆளாகியுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: TV Serial, Vijay tv