Home /News /entertainment /

ஈரமான ரோஜாவே சீரியல் பார்த்தி - காவ்யா கதையில் திடீர் மாற்றம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

ஈரமான ரோஜாவே சீரியல் பார்த்தி - காவ்யா கதையில் திடீர் மாற்றம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

ஈரமான ரோஜாவே 2

ஈரமான ரோஜாவே 2

பார்த்தி - காவ்யா விஷயத்தில்  அது அப்படியே தலைகீழாக மாறுகிறது

    ஈரமான ரோஜாவே முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் சேர்ந்து விடுவார்கள் என நினைத்த பார்த்தி - காவ்யா ஜோடியை பார்த்திபனின் அம்மா பிரிக்க முடிவு எடுக்கிறார். அதற்கு பின்னால் மிகப் பெரிய காரணமும் இருக்கிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடர் இளைஞர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் சீசனில் ஹீரோவாக நடித்த திரவியம்  இதிலும் ஹீரோ. இவருடன் தேன்மொழி எம்.பி.ஏ சித்தார்த்தும் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவருக்கும் சோஷியல் மீடியாவில் பயங்கர வரவேற்பு. இருவரும் ஏற்கெனவே பல சீரியல்களில் நடித்து இருப்பதால் இவர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல் சீரியலில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ள காவ்யா மற்றும் பிரியாவுக்கு  இந்த தொடர் நல்ல ரீச்சை வாங்கி தந்துள்ளது.

    கணவர் சஞ்சீவின் பிறந்த நாள்.. வருத்தப்பட்ட ஆல்யா மானசா!

    ஈரமான ரோஜாவே  சீசன் 2 கதை எதை சுற்றி அமைந்துள்ளது என்பதை சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சீரியல், ஜோடி மாறி திருமணம் ஆன பிறகும் மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது.விபத்து போல் நடந்து முடிந்த கல்யாணத்தை 2 ஜோடிகளும் மெல்ல மெல்ல ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். பிரியாவும் ஜீவாவும் நெருக்கமாகி வருகின்றனர். ஆனால் பார்த்தி - காவ்யா விஷயத்தில்  அது அப்படியே தலைகீழாக மாறுகிறது

    உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!

    காவ்யா ஏற்கெனவே காதலித்த விவகாரம் இப்போது அவரின் மாமியாருக்கு தெரிந்து விட்டது. இதை பற்றி அவரும் காவ்யாவிடம் பேசி விட்டார். ஆனால் தனது மகன் ஜீவா தான் அந்த காதலன் என்பது அவருக்கு தெரியாது. இப்படி இருக்கையில் காவ்யா - பார்த்திபனின் வாழ்க்கையை சரி செய்ய இருவரும் பிரிந்து விடுங்கள் என்று அவர் கூறி விட்டார். ஆனால் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தியும் காவ்யாவும் நெருக்கம் ஆகி வருகிறார்கள். மாமியாரின் இந்த முடிவு காவ்யாவுக்கு அதிர்ச்சியை தருகிறது.



    இதனால் இருவரையும் அதிகம் பேச விடாமல் பழக விடாமல் அவர் பார்த்து கொள்கிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது . காவ்யாவும் பார்த்தியும் கூடிய விரைவில் ரொமான்ஸ் செய்வார்கள் என ரசிகர்கள் காத்திருக்க சீரியலில் இப்போது புதிய ட்விஸ்ட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி