Home /News /entertainment /

'ஈரமான ரோஜாவே' ஜீவா அம்மாவா இது? ரசிகர்களுக்கு பயங்கர ஷாக்!

'ஈரமான ரோஜாவே' ஜீவா அம்மாவா இது? ரசிகர்களுக்கு பயங்கர ஷாக்!

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே

ஈரமான ரோஜாவே பார்வதி அம்மாவா இது? என பலரும் ஆச்சரியத்துடன் அந்த வீடியோவை பார்க்கின்றனர்.

    ஈரமான ரோஜாவே 2சீரியலில் ஜீவா மற்றும் பார்த்தியின் அம்மாவாக நடிக்கும் நடிகை மீனா வேமுரியின் இன்ஸ்டா வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக்.

    சீரியல் நடிகர், நடிகைகள் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களாகவே திரையில் தோன்றி நம்மை கவர்கின்றனர். அந்த ரோலை முழுவதுமாக உள்வாங்கி கொண்டு அவர்கள் உயிரை கொடுத்து நடிப்பதால் அவர்களின் உண்மையான பெயரை காட்டிலும் சீரியலில் அவர்கள் நடிக்கும் ரோல்களின் பெயர்களே ரசிகர்களின் மனதில் பதிந்து விடுகிறது. அவர்களை எங்கு பார்த்தாலும் அந்த பெயரை சொல்லியே அழைப்பார்கள், பேசுவார்கள். அந்த வகையில் ஈரமான ரோஜாவே சீரியலில் 2 மகன்களுக்கு அம்மாவாக, பிரியா, காவ்யாவுக்கு மாமியாராக பார்வதி என்ற ரோலில் நடிப்பவர் சின்னத்திரை நடிகை மீனா வேமுரி.



    சித்தி 2 முடிந்தாலும் சின்னத்திரையில் வெண்பா மவுசு இன்னும் குறையவில்லை!

    இவர் இதற்கு முன்பு சன் டிவி, ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் பல தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை சினிமாவிலும் துணை நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடிக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருப்பார். இப்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்வதியாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Meena Vemuri (@meenavemuri)






    சீரியலில் மெச்சூரான ரோலில் நடித்தாலும் ரியல் லைஃப்வில் மீனா மிகவும் மாடர்னான பெண்மணி. செம்ம ஸ்கூலாக விதவிதமான ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். அதே போல் இன்ஸ்டாவில் செம்ம ஆக்டிவாகவும் வலம் வருகிறார். சமீபத்தின் இன்ஸ்டா ட்ரெண்டான “ரா ரா ரங்கம்மா” பாடலுக்கு  நடனம் ஆடி இன்ஸ்டா ரீல்ஸை மீனா வெளியிட்டுள்ளார். குத்தாட்டம் போட்ட அவரின் வீடியோ லைக்ஸ்களை அள்ளியுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். ஈரமான ரோஜாவே பார்வதி அம்மாவா இது? என பலரும் ஆச்சரியத்துடன் அந்த வீடியோவை பார்த்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி